குருவாயூர் தேவக்ஷேத்ரத்தின் மேற்குநடையில், ஒரு வயதுமுதிர்ந்த வயோகத்தி ஒரு இடத்தில் நிறையநேரம் அமர்ந்திருந்தாள்!
அப்போது இருநிறம்கொண்ட ஒரு சிறுவன் அவளின் அருகே வந்து
என்ன பாட்டி? ரொம்பநேரமா பார்க்கின்றேன்?
இங்கேயே இருக்கின்றீர்களே?
யாருக்காக காத்திருக்கின்றீர்கள்?
என்று பாட்டியை பார்த்துகேட்டான்!
பாட்டியோ!
நேரம் ஆகிவிட்டது!
என்னுடைய மகனும், மருமகளும்தான் இங்கே வந்தோம்!
என்னை இங்கே உட்காரவைத்து. எதையோ வாங்கிவருவதாக சொன்னார்கள்!
அவர்களை இன்னமும் காணவில்லை!
ஒருவேளை அவர்கள் வழிதவறி போனார்களோ?
தெரியாது?
யாரையாவது கூப்பிட்டு போனில் கூப்பிட சொல்லலாம் என்று பார்த்தால்? என் மகன் நம்பரெல்லாம் எனக்கு தெரியாது?
எனக்கு இந்த செல்போன் உபயோகம் செய்யவும் தெரியாது?
நெடுநாட்களாக கேட்டுகொண்டேயிருந்தேன்!
குருவாயூரானை கண்குளிர காணவேண்டும்! என்று.
இன்றைக்குதான், அழைத்துவந்தார்கள்!
கண்குளிர பகவானை கண்டேன்!
மகனும், மருமகளும் நன்றாக இருக்க பிரார்த்தனை செய்தேன்!
என்னுடைய கெட்டியோன் எனக்கு நஷ்டப்பட்டுபோனது இரண்டுவர்ஷகாலம் ஆகிவிட்டது!
அதன்பிறகு எங்கும் போவதில்லை!
இப்போதுதான் வெளியே வரதொடங்கினேன்!
என்றாள்!
பாட்டி பார்த்தா! பசியில் இருப்பதுபோல் தெரிகின்றது! ஏதாவது சாப்பிட்டீங்களா?
இல்லையப்பா!
பகவானை பார்த்துவிட்டு
இங்கே மகன் இங்கே அமரவைத்து போனான்.
இன்னும் காணவில்லை!
சரி பாட்டி! நான்போய் ஏதாவது உனக்கு சாப்பிட கொண்டு வருகின்றேன்!
பாட்டி யோ!
வேண்டாம் மகனே!
மகன் வந்தவுடன் அவர்களோடு நல்ல சைவ ஓட்டலில் சாப்பிடுவோம்
என்றாள்!
இருக்கட்டும் பாட்டி!
அவர்கள் வரும்போது அவர்களோடு சாப்பிடுங்க!
இப்போது நான் கொஞ்சம் வாங்கிவருகிறேன்! என்று சொல்லி சிட்டாக பறந்துபோனான்
சிறிதுநேரத்தில் திரும்பிவந்தான்! கையில் வாழையிலையில் ப்ரசாதமும்! மேலும் சூடாக இருக்கும் பால்பாயசமும் கொண்டுவந்து கொடுத்தான்!
பாட்டி பாயசம் சூடாக இருக்கின்றது! பார்த்துசாப்பிடுங்கள்!
தம்பி நீயாரப்பா?
என்றாள்!
நான் இங்கேதான் இருப்பேன் பாட்டி!
அப்பா அம்மா?
வீட்டில இருக்காங்க!
இங்கே என்ன செய்கின்றாய்?
உங்களை போன்றவற்களெல்லாம் வேடிக்கை பார்ப்பதுதான் வேலை!
அப்படியென்றால் பள்ளிகூடத்திற்கு போவதில்லை யா?
படிப்பு ஏறுணால்தான் போகமுடியும்!
அதுதான் வரமாட்டேங்குது என்றான்!
சரி பாட்டி வருகின்றேன்!
என்று சொல்லி சிட்டாக பறந்துசென்றான்!
அதை பார்த்த பாட்டி புன்னகைத்தாள்!
கொஞ்சம்நேரம் கழித்து ஒருவர் வயோதர் வந்தார்!
என்னம்மா? ரொம்பநேரமா இருக்கின்றீர்கள்?
இப்போ போனானே?
உங்க பேரனா? என்றார்!
இல்லையில்லை!
அவனை இப்போதுதான் பார்க்கிறேன்!!
என்றாள்!
அதற்குள் அங்கே மைக்கில் அலவஞ்ச் செய்தார்கள்!
மடப்பள்ளியிலிருந்து தேவனுக்கு நைவேத்தியம் வைக்கவேண்டிய நைவேத்தியத்திலிருந்து யாரோ கொஞ்சம் திருடிசென்றுவிட்டார்கள் என்றார்கள்!
அந்த பெரியவர்!
அந்த பாட்டியை பார்த்து
இப்போ வந்துட்டுபோனானே!
அந்த சிறுவன், அவன் சாக்ஷாத் குருவாயூர் அம்பாடிகண்ணன்தான்
அவனுடைய நைவேத்தியம் தான் சாப்பிடுகின்றீர்கள்!
பாட்டிக்கு திடுக்கென தூக்கிவாரி போட்டது!
ஆனந்தக்கண்ணீர் வந்தது!
கிருஷ்ணா! குருவாயூரப்பா!!
என்றாள்!
பெரியவர் சொன்னார்!
அம்மா! உங்களின் மகன் வரமாட்டான்!
உங்களை உங்களின் மகனும் மருமகளும் உங்களை இங்கு கொண்டு வந்ததே! உங்களை களையத்தான்!
இது நித்யமும் நடக்கின்ற சங்கதி!
நீங்கள் கவலைப்படவேண்டியதில்லை!
அங்கே கொஞ்சதூரம் நடந்தால்!
ஒரு விருத்த ஆஸ்ரமம் வரும் அங்கே உங்களுக்கு இலவசமா சகலவிதமான சௌகர்யங்களும் செய்துகொடுப்பார்கள்!
அங்கே போய் என் பேரை சொல்லுங்க! என் பெயர் கேசவன் என்றார்!
ஒருபக்கம் கண்ணனே காட்சிதந்தார், ப்ரசாதம் தந்தார்!
மறுபக்கம் சொந்தம் மகனாலேயே களையப்பட்டேன்!
என்று நினைத்து அவர் சொன்ன ஆஸ்ரமம் நோக்கி நடந்தாள்!
அங்கே அஸ்ரமம் எதுவும். இல்லை!
ஏதோ வீடு இருந்தது!
ஏகதேசம் மணி இரவு ஏழுமேணி ஆகிவிட்டது!
உள்ளே சென்றாள்!
அங்கே சென்றாள் பாட்டி!
அங்கே ஒரு பெண் பச்சைகாய்கறிகள் அரிந்துகொண்டிருந்தாள்!
இராத்திரி சாப்பாட்டிற்காக சமையலை செய்ய!
அவளின் பெயர் சௌதாமினி!
அந்த சௌதாமினிக்கு பாட்டியை பார்த்தும் பேரதிர்ச்சி!
நீங்கள் என் மாமியார் போல் இருக்கின்றீர்கள்!
நான் அத்தையின் மகனைதான் விவாஹம் செய்தேன்!
அவர்கள் இறந்து ஆறுவருடங்கள் ஆகிவிட்டது!
அவரைபோலவே இருக்கின்றீர்கள்!
என்று சந்தோஷித்தாள்!
மகளே! கேசவன் என்பவர்தான் என்னை அனுப்பினார்! என்றாள் பாட்டி!
என்னது கேசவன் மாமா அனுப்பினாரா?
இங்கே வாருங்கள்!
இந்த போட்டோவில் இருப்பவரா?
ஆம் அவரேதான்!
சௌதாமினி சொன்னாள்!
அவர் காலமாகி ஏகதேசம் பத்துவர்ஷகாலம் ஆகிவிட்டது!
என்ன அதிசயம்?
என் கண்களை நம்பமுடியவில்லை?
இருந்தாலும் நீங்கள் இனிமேல் எங்களோடு தான் இருக்கவேண்டும்!
கொஞ்சம்நேரத்தில் என்னுடைய கெட்டியோன் வந்துவிடுவார்!
உங்களை பார்த்ததும் பெற்ற அம்மாவை கண்டதுபோல் சந்தோஷிப்பார்.
என்றுசொல்லி கெட்டியோனுக்கு போன் செய்தாள்!
குருவாயூர் அம்பாடிகண்ணனின் லீலாவினோதங்களில் இதுவும் ஒன்று!
*இது நடந்த சம்பவம் இது!

நடேஷ் கன்னா
கல்லிடைக்குறிச்சி
நெல்லை மாவட்டம்