தெருவில் ஜால்ரா சப்தத்துடன், தம்பூரா நாதமும் இழைந்த சங்கீதத்துடன் வடக்கத்திய மேளத்தின் ஒலியின் அடவாக இருந்தது.
பங்களூர் வீதியில் ஒரு விசித்திரமான காட்சிதான்;
மைதிலி தனது அடுக்குமாடி குடியிருப்பிலிருந்து வெளியே வந்து தனது பால்கனியில் நின்றபடி வேடிக்கை பார்க்கலானாள்.
பஞ்சகச்ச கட்டு வேட்டி, 'பள பள:சரி கையுடன் கூடிய சில்க் ஜிப்பா, கட்டுக் குடுமி, நெற்றியில் நாமம்; கண்மூடி உச்சஸ்தாயியில் அஷ்டபதி பாடல்களை பாடிக்கொண்டு, ஆடி வந்தவர்கள்; வெளி நாட்டவர்; என்பது அவர்களைப் பார்த்தாலே தெரிந்தது.
ஒரு விதமான பரவச நிலையில் இருந்தவர்களின் கால்கள், மேளத்தின் தாளகட்டுக்குத், தானாக நடனமிட்டன.
பெரிய ஜால்ராக்களின் ஓசை அவர்களை; இன்னும் இன்னுமென வேகத்தைக் கூட்டியது.
ஒரு ஆர்வ கோளாறு உந்த,அந்த பஜனை குழுவை நாலைந்து ஃபோட்டோக்களும்; இரண்டு மூன்று காணொளி காட்சியாகவும் எடுத்து, தனது அண்ணன் சடகோபனுக்கு அனுப்பி வைத்தாள்.
திடீரென ஒரு சிறு கல் ஒன்று அவள் மேல் விழ, நடுக்கத்தில் மைதிலியின் அலைபேசி நழுவி கீழே விழ, சரசரவென இறங்கி, அதை எடுக்க முயலும் போது; அலைபேசியை காலால் மிதித்து உடைத்தான்; தம்பூரா மீட்டூபவன்.
அனல் தெறிக்கும் பார்வையுடன்; சைகையால் திரும்பிப் போக ஆணையிட்டது அவன் கரம்.
வேகமாக உள்ளே வந்தவளுக்கு ஏதோ விபரீதம் நடக்கிறது; என்று மட்டும் புரிந்தது.
உடனடியாக தன் தந்தையின் அலைபேசியில் இருந்து காவல் துறை கட்டுப்பாட்டு அறைக்கும்; அவசர போலிஸ் எண் 100 க்கும் ஃபோன் பேசி விவரம் சொன்னாள்.
பஜனைக் கூட்டம் தெருமுனை திரும்பும் முன்; காவல் துறையினர் அங்கு வந்து அந்த கும்பலை கைது செய்ததுடன், அவர்களிடமிருந்து துப்பாக்கிகள், கையெறி குண்டுகள் மற்றும் வெடிபொருட்கள் இவற்றைக் கைப்பற்றினர்.
அன்று மதியம் முக்கிய செய்தியில் கிருஷ்ண பக்தர்கள் போல் வேடமிட்டு வந்த தீவிரவாதி கும்பலை,இல்ல பெண்மணி ஒருத்தியின் சமயோசித புத்தியால் காவல் துறையினர் வளைத்துப் பிடித்தார்கள்' என்ற செய்தி ஒளிபரப்பாகியது. மைதிலியின் படபடப்பு இன்னும் அடங்கவில்லை.
சசிகலா விஸ்வநாதன்
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?