சின்னக் குருவி கூடு கட்டி
மின்னுற மின்மினி விளக்கு வச்சி
கண்ணுக்கு அழகா வாழுது பார்!
கருத்தாய் வாழ்ந்திட கூறுது பார்!!
தன்னின குஞ்சுக்கு இரைதேடி
தனியே போகும், அது சமயம்
சர்ப்பம் தீண்டா வேர்களையே
கூட்டில் வைத்ததை கூறுது பார்!
அன்பெனும் தாய்மை அதற்குண்டு
அறிவினைப் போற்றும் திறனுண்டு!
பண்புடன் வாழும் குருவியை பார்
பகுத்தறிவுடனே திரியுது பார்!
எண்ணிய படியே கூடு கட்டி
எழுத்தறி வில்லா குருவிகுட்டி
உன்னதமாக இரை ஊட்டி
உனக்கொரு பாடம் புகட்டுது பார்!

வெ.தமிழழகன் எம்ஏ.பிஎட்
சேலம்
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%