கூடங்குளம் அணுமின் நிலையம், அமெரிக்க தூதரகம், நடிகர் பிரபு வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்
சென்னை, அக். 29–
கூடங்குளம் அணுமின் நிலையம், அமெரிக்க தூதரகம், நடிகர் பிரபு வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தமிழக முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, உள்ளிட்ட பெரும்பாலான அரசியல் கட்சி தலைவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலம் உள்ளிட்ட முக்கிய அரசு அலுவலகங்கள், பல நடிகை, நடிகர்களின் வீடுகள், பத்திரிகை அலுவலகங்கள், பத்திரிகையாளர்களின் வீடுகள், பள்ளிகள் என பரவலாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது. இதைதொடர்ந்து நடைபெறும் சோதனையில் வெடிகுண்டு மிரட்டல்கள் புரளி என்பது தெரிய வருகிறது.
இந்நிலையில் இன்று கூடங்குளம் அணு உலை ஒன்று மற்றும் இரண்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநா் (டிஜிபி) அலுவலகத்தின் மின்னஞ்சல் முகவரிக்கு இன்று காலை அடையாளம் தெரியாத நபா் ஒருவா் மின்னஞ்சல் அனுப்பியுள்ளாா். இதைத் தொடர்ந்து வெடிகுண்டு நிபுணர்கள் உதவியுடன் காவல் துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். ஆனால் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. இதனால் அது புரளி என்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து போலீசார் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த ஆசாமி குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் சென்னை தி.நகரில் உள்ள நடிகர் பிரபு வீடு மற்றும் அமெரிக்க துணை தூதரகத்துக்கு வெடிகுண்டு வைத்திருப்பதாகவும், அது சிறிது நேரத்தில் வெடித்துச் சிதறும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது. அதன்பேரில் போலீஸாா் மற்றும் வெடிகுண்டு செயலிழப்பு நிபுணா்கள் அடங்கிய குழுவினா் மோப்ப நாய் உதவியுடன் பிரபு வீட்டை சோதனையிட்டனர். இதில் வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என்பது தெரியவந்துள்ளது.இதைத் தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.\\\
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?