கூவம் ஆற்றின் கரையோரங்களில் உள்ள நீர்நிலை ஆக்கிரமிப்புகளை 8 வாரத்துக்குள் அகற்ற உத்தரவு

கூவம் ஆற்றின் கரையோரங்களில் உள்ள நீர்நிலை ஆக்கிரமிப்புகளை 8 வாரத்துக்குள் அகற்ற உத்தரவு

சென்னை:

சென்னை மாநகரில் உள்ள அடை​யாறு, கூவம், பக்​கிங்​ஹாம் கால்​வாய் கரையோரங்​களில் உள்ள ஆக்​கிரமிப்​பு​களை முழு​மை​யாக அகற்றி சென்​னை​யில் உள்ள நீர்​நிலைகளை பழமை மாறாமல் பாது​காக்​கக்​கோரி வி.க​னகசுந்​தரம் என்​பவர் சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் பொதுநல வழக்கு தொடர்ந்​தார்.


இந்த வழக்கை விசா​ரித்த நீதிப​தி​கள் ஜி.ஆர்​.சு​வாமி​நாதன், வி. லட்​சுமி நாராயணன் ஆகியோர் அடங்​கிய அமர்வு பிறப்​பித்​துள்ள உத்​தர​வில், நீர்​நிலைகளில் ஒரு​போதும் ஆக்​கிரமிப்​பு​களுக்கு அனு​மதி வழங்​கக்​கூ​டாது என உச்ச நீதி​மன்​ற​மும், உயர் நீதி​மன்​ற​மும் பல்​வேறு தீர்ப்​பு​களில் தொடர்ச்​சி​யாக உத்​தர​வு​களை பிறப்​பித்து வரு​கிறது. சென்​னை​யில் உள்ள கூவம், அடை​யாறு மற்​றும் பக்​கிங்​ஹாம் கால்​வாய்​கள் முழு​மை​யாக ஆக்​கிரமிப்​பில் உள்​ளன.


கூவம் நதி சுற்​றுச்​சூழல் மறுசீரமைப்பு திட்​டம், அடை​யாறு மற்​றும் பக்​கிங்​ஹாம் கால்​வாய் புனரமைப்பு போன்ற திட்​டங்​களின் மூல​மாக நீர்​நிலை ஆக்​கிரமிப்​பு​களை அகற்ற நடவடிக்கை எடுத்​தா​லும், மீண்​டும் புற்​றீசல் போல ஆக்​கிரமிப்​பு​கள் பெருகி வரு​கின்​றன. குறிப்​பாக, அடை​யாறு கடலில் கலக்​கும் கழி​முகம் உள்ள பட்​டினப்​பாக்கம் சீனி​வாசபுரத்​தில் சுமார் ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட வீடு​கள் கரையோரங்​களை ஆக்​கிரமித்து கட்​டப்​பட்​டுள்​ளன.


எனவே, இந்த நீர்​நிலை ஆக்​கிரமிப்​பு​களை முழு​மை​யாக அகற்ற 8 வார காலத்​தில்சென்னை மாநக​ராட்​சி, பொதுப்​பணித்​துறை, வரு​வாய்​துறை, நீர் வள ஆதா​ரத்​துறை, குடிசை மாற்று வாரி​யத்​துறை என அனைத்து அதி​காரி​களும் ஒருங்​கிணைந்து நடவடிக்கை எடுக்க வேண்​டும். இப்​பகு​தி​யில் வசிக்​கும் குடும்​பங்​களின் மறு​வாழ்​வுக்​கும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்​டும். இதுதொடர்​பாக தமிழக அரசின் தலை​மைச் செயலர் 3 மாதங்​களில் அறிக்கை தாக்​கல் செய்ய வேண்​டும், என உத்​தர​விட்​டுள்​ளனர்.


மேலும், திரு​வேற்​காடு பகு​தி​யில் கூவம் ஆற்​றின் கரையோரங்​களை ஆக்​கிரமித்து வசிக்​கும் 150-க்​கும் மேற்​பட்ட குடும்​பங்​களை 8 வாரங்​களில் அங்​கிருந்து அகற்​றி, அவர்​களின் மறு​வாழ்​வுக்கு உரிய நடவடிக்கை எடுத்​து, கூவம் ஆற்றை முழு​மை​யாக சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்​டும். ஆக்​கிரமிப்​பு​களை அகற்​றாத அதி​காரி​கள் மீது நீதி​மன்ற அவம​திப்பு நடவடிக்கை எடுக்​கப்​புடும் என அதி​காரி​களுக்கு நீதிப​தி​கள் உத்​தர​விட்​டுள்ளனர்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%