'பிஸ்கெட் பாக்கெட், பழங்கள் ,மறக்காமல் வாட்டர் பாட்டில் வாங்கி வைத்து கொண்டேன்.
'பஸ்ஸில் கூட்டம் அதிகமாக இல்லை. நேரம் ஆக ஆக பஸ்ஸில் கும்பல் கூடி கொண்டிருந்தது.3 மணி நேர பிரயாணம் திருச்சி டு விழுப்புரம். சில மணி நேரம் கவலைகளை மறந்து வித வித மான மனிதர்களை கண்கள் பார்த்ததில் மனதில் ஒரு விதமான மகிழ்ச்சி.
'நின்றிருந்த சிலர் உட்கார இடம் கிடைக்காமல் இடம் கொடுக்கும்மாறு சண்டை போட்டுக் கொண்டிருந்தனர். ஊர் நெருங்குகிற வரைக்கும கர்ப்பிணிகளோ, குழந்தையை தூங்கி கொண்டு இருப்பவர்களோ யாராக இருந்தாலும் உட்கார இடம் கொடுக்க மனம்வராமல் கல் நெஞ்சோடு உட்காந்து கொண்டு இருந்தனர்.
'குழந்தைகளின் புஸ்தகப்பை தலையில் இடிக்கிறது என்று உட்காந்து இருக்கிறவர்கள் குழந்தைகளை இரக்கம் இல்லாமல் தள்ளி கொண்டு இருந்தனர்..
'கண்டக்டர் டிக்கட் கொடுத்து விட்டு சில்லறை பாக்கியை டிக்கெட்டில் எழுதி கொடுத்து விட்டு போனதை பையில் பத்திரமாக வைத்துக் கொண்டேன்.
'பூக்காரம்மா பஸ்ஸிலும் பூக்களைதொடுத்து வயதான காலத்தில் விற்பனை செய்த போது அந்தம்மாவை மனதார பாராட்டினேன்.
'இன்னும் 10 நிமிஷத்தில் விழுப்புரம் வந்து விடும் என்று அறிவிப்பு கொடுக்க இளம் வயது பெண் ஒருவர் அழகியகுழந்தை யை தூக்கி கொண்டு இருந்த போது தோளில் இருந்த குழந்தை மிருதுவாக என்னை தொட்டு சிரித்த போது என் உடம்பு சிலிர்த்துகொள்ள அந்தபெண்ணுக்கு எழுந்து இடம் கொடுத்ததில் நான் வாங்க வேண்டிய சில்லறை வாங்கும் போது ஊர் நெருங்கி விட்டது.
'நான் இறங்கும் போது கண்டக்டர் கத்திகொண்டு இருந்தார்சரியான சாவு கிராக்கியா வர்றாங்க. அவர் திட்டியது காதில்விழுந்தாலும் ரோஜாப்பூவான குழந்தையின் சிரிப்பே மனதில் சந்தோஷமாக நிறைந்து இருந்தது.'

ஜயந்தி சிவக்குமார்.
No.1 டோல்கேட்
திருச்சி.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?