கேட்டாயா?

கேட்டாயா?


       செல்போனின் டிஸ்ப்ளே பளிச்சிட்டது. நண்பன் தினேஷ் தான். பெயரைப் பார்த்ததுமே உற்சாகமானான் யுவன் .


     தினேஷிடம் ஒரு வாரம் முன்புதான் யுவன் சொல்லி

வைத்திருந்தான். இப்போது நாங்கள் இருக்கும் வீட்டின் வாடகை அதிகமாக இருக்கிறது என்றும்

குறைந்த வாடகையில் உங்கள் ஏரியாவில் ஏதாவது வீடு கிடைக்குமா என்றும் பார்த்து சொல்லும்படி கூறி இருந்தான்.


      செல்போனை எடுத்து "ஹலோ தினேஷ். சொல்லுடா " என்றான் யுவன் . "வீட்டுக்கு சொல்லி வச்சிருந்த இல்லே.. எங்க வீட்டுக்கு பக்கத்துலயே ஒரு வீடு காலி ஆகுது. எங்க ஹவுஸ் ஓனரோடது தான். பேசி முடிச்சிடலாமா? " என்று கேட்டான் தினேஷ்.


       "தாராளமா. ஆமா வாடகை குறைவாகத்தானே இருக்கும் ?"


  "நீ இப்போ கொடுக்கறதை விட ஒரு 2000 ரூபாய் குறைவா தான் இருக்கும் "என்றான் தினேஷ்.


    "வண்டி பார்க் பண்ண எல்லாம் இடம் எப்படி ?"என்று யுவன் கேட்க "தேவையான இடம் இருக்கு." என்றான் தினேஷ்.


"பக்கத்திலேயே கடைங்க எல்லாம் இருக்கா இல்லே தூரமா போகணுமா?"


"சும்மா கொஞ்ச தூரத்துலயே

ரெண்டு டிபார்ட்மெண்ட் ஸ்டோர்கள் இருக்கு" என்றான் தினேஷ்.


    "அப்புறம் தண்ணி பிரச்சனை எல்லாம் " 


    "தண்ணி சும்மா தேன் மாதிரி இனிப்பா இருக்கும்." என்ற தினேஷிடம்" சரி ஓனர் வந்ததும் பேசி முடிச்சிடு" என்றான் யுவன்.


     புது வீட்டுக்கு மனைவியுடன் குடி வந்து ஒரு வாரம் ஆயிற்று .காலை ஆறு மணிக்கு நியூஸ் பேப்பர் எடுக்க வெளியில் வந்த யுவன் அதிர்ந்து போனான்.நேற்று இரவு நிறுத்தியிருந்த அவனுடைய பைக் காணாமல் போயிருந்தது. பதற்றத்துடன் தினேஷைத் தேடிச் சென்ற யுவன் நடந்த விஷயத்தை கூறினான்.


   "ஏண்டா யுவன் இந்த ஏரியாவில் தான் திருட்டு பயம் அதிகமா இருக்கே. கொஞ்சம் உஷாரா இருக்கக் கூடாதா?"என்று தினேஷ் கேட்க "என்னது திருட்டு பயமா ?

இதை ஏண்டா நீ அன்னைக்கே சொல்லல? "என்று கத்தினான் யுவன்.

 

     "நீ அதைப் பத்தி கேட்கவே இல்லையே "என்றான் தினேஷ் அமைதியாக .



மு.மதிவாணன்

குபேந்திரன் நகர்

அரூர் 63690

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%