கேபிஆர் கலை அறிவியல் கல்லூரியில் மாணவர்களுக்கான அறிவியல் கண்காட்சி
Aug 25 2025
16

கோவை, ஆக. 23–
கேபிஆர் கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரியில் நுண்ணறிவு அமைப்பு மற்றும் தரவு அறிவியல் புலம்கணினி அறிவியல் மற்றும் தரவுப் பகுப்பாய்வுத்துறை சார்பாக பள்ளி மாணவர்களுக்கான அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. மூன்றாம் ஆண்டு கணினி அறிவியல் மற்றும் தரவு பகுப்பாய்வுத்துறை மாணவி பிரீத்தி அனைவரையும் வரவேற்றுப்பேசினார். கல்லூரியின் முதல்வர் பி.கீதா பள்ளி மாணவர்களின் அறிவியல் திறனை வெளிக்கொணர்வதை முதன்மையான நோக்கமாகக் கருதி இந்நிகழ்வு நடத்தப்படுகிறது எனக்கூறி தலைமையுரையாற்றினார். இந்நிகழ்வின் சிறப்பு விருந்தினராக கூகுள் வளர்ச்சி நிபுணர் கமல் ஸ்ரீ சவுந்தர பாண்டியன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். இதனைத் தொடர்ந்து மாணவர்கள் தயாரித்த அறிவியல் கண்டுபிடிப்புகளை சிறப்பு விருந்தினர்கள் மற்றும் துறை சார்ந்த நிபுணர்கள் பார்வையிட்டனர். பெங்களூரு டெலைட் நிறுவனத்தின் மனித வள மேம்பாட்டாளர் என்.கருணாகரன் சிறந்த அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு பரிசுகளை வழங்கினார். கணினி அறிவியல் மற்றும் தரவுப் பகுப்பாய்வுத்துறை மாணவர் தீபன் குமார் நன்றி கூறினார். இந்நிகழ்வில் 375 க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர் குழுக்கள் கலந்து கொண்டு தங்களது அறிவியல் படைப்புகளைக் காட்சிப்படுத்தினர். மாணவர்கள், பேராசிரியர்கள், துறைத்தலைவர்கள் கல்லூரி அலுவல்நிலைப் பணியாளர்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பார்வையிட்டனர்.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?