கொல்லிமலை அரசு மருத்துவமனையில் ரூ.4.18 கோடியில் புதிய கட்டிடம் கட்டும் பணி: அமைச்சர் மதிவேந்தன் அடிக்கல்
Aug 25 2025
92
நாமக்கல், ஆக. 23–
நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை அரசு மருத்துவமனையில் ரூ.4.18 கோடி மதிப்பீட்டில் கூடுதல் புதிய கட்டிடம் கட்டும் பணியினை அமைச்சர் மதிவேந்தன் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
நாமக்கல் மாவட்டம், கொல்லி மலை அரசு மருத்துவமனையில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன் ரூ.4.18 கோடி மதிப்பீட்டில் கூடுதல் புதிய கட்டிடம் கட்டும் பணியினை, சேந்தமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் கு.பொன்னுசாமி முன்னிலையில் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
அமைச்சர் மா.மதிவேந்தன் நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை அரசு மருத்துவமனையில் ரூ.3.50 கோடி மதிப்பீட்டில் விபத்து மற்றும் அவசர சிசிச்சை பிரிவுடன் கூடிய கூடுதல் புதிய கட்டிடம் மற்றும் ரூ.63 லட்சம் மதிப்பீட்டில் புதிய பிணவறைக் கூடம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், கொல்லிமலை அட்மா குழு தலைவர் செந்தில் முருகன், நாமக்கல் வருவாய் கோட்டாட்சியர் வே.சாந்தி, இணை இயக்குநர் (நலப்பணிகள்) ஏ.ராஜ்மோகன் உட்பட துறைச் சாந்த அலுவலர்கள் மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?