
சென்னை, ஆக. 2-
சென்னை மாவட்ட விளையாட்டு வளாகம், நேரு பார்க்கில் ஒன்றிய அரசின் கேலோ இந்தியா அஸ்மிதா பெண்கள் கிக் பாக்ஸிங் லீக் போட்டி, தமிழ்நாடு அமெச்சுவர் கிக் பாக்ஸிங் சங்கம் சார்பில் நடைபெற்றது. இதில் 300க்கும் மேற்பட்ட மாணவிகள் பங்கேற்றனர். இதில் பாயிண்ட் பைட்டிங்க், லைட் கான்டாக்ட், புல் கான்டாக்ட், கிக் லைட், மியூசிக்கல் பார்ம் என 7 விதமான போட்டிகள் நடைபெற்றன. மதுரையை சேர்ந்த மாணவிகள் கலந்து கொண்டு 6 தங்கம், 6 வெள்ளி மற்றும் 10 வெண்கல பதக்கங்களை வென்றனர்.
பாயின்ட் ஃபைட்டிங் பிரிவில் ஆஷிகா, சாரா கேசண்ட்ரா லாரா ஜோன், மோசிகா நாச்சியார், ஹர்ஷினி தங்கம், கோபிகா, நம்ரதா, கிருஷ்ணா ஆதர்ஷினி வெள்ளி, சம்யுக்தா, ரியா, லஷிதா, வித்திகா, ஜாய் பிரசன்னா, ஜீவிதா, முத்து பிரதிஷா ஆகியோர் வெண்கலம் வென்றனர்.
லைட் கான்டாக்ட் பிரிவில் ஜீவிதா வெள்ளியும், தார்ஷினி வெண்கலமும் வென்றனர். கிரியேட்டிவ் பார்ம் பிரிவில் சம்யுக்தா தங்கமும், சாரா வெள்ளியும், வருணித்தா, ஹரினி, வெண்கலமும் வென்றனர்.
மியூசிக்கல் பார்ம் பிரிவில் ஜாய் பிரசன்னா வெள்ளி வென்றார்.
வென்ற மாணவிகளை மாவட்ட அமெச்சூர் கிக் பாக்ஸிங் சங்கத் தலைவர் நாராயணன், செயலாளர் பிரகாஷ் குமார், பயிற்சியாளர் கவுரிசங்கர், முத்துக் குமார் பாராட்டினர்.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?