
நாமக்கல், ஆக. 2–
நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் வல்வில் ஓரி விழாவை சட்டமன்ற உறுப்பனிர் பொன்னுசாமி தொடங்கி வைத்தார்.
கடையேழு வள்ளல்களில் ஒருவரான வல்வில்ஓரி வில்வித்தையில் சிறந்து விளங்கி கொல்லிமலையை ஆண்ட மன்னராவார். இவர் தானத்தில் சிறந்து விளங்கியதால் கடையேழு வள்ளல்களில் ஒருவராக பொதுமக்களாலும், வரலாற்று அறிஞர்களால் போற்றப்படுகிறார்.
இவரது புகழுக்கு பெருமை சேர்க்கும் வகையில் நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் வல்வில்ஓரி விழா தமிழ்நாடு அரசின் சார்பில் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகின்றது. அதனைத் தொடர்ந்து இந்த ஆண்டும் கொல்லிமலை செம்மேடு வல்வில்ஓரி அரங்கில், வல்வில்ஓரி விழா மற்றும் சுற்றுலா விழாவும், கொல்லிமலை வாசலூர்பட்டி தாவரவியல் பூங்காவில் மலர்க்கண்காட்சி தொடக்க விழா இன்று (2ந் தேதி) நடைபெற்றது.
இவ்விழாவில் சேந்தமங்கலம் சட்ட மன்ற உறுப்பினர் பொன்னுசாமி, நாமக்கல் வருவாய் கோட்டாட்சியர் வே.சாந்தி தலைமையில், வல்வில் ஓரியின் உருவப் படத்திற்கு மாலை மணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
முன்னதாக, கொல்லிமலையில் தோட்டக்கலையின் துறையின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த மலர் கண்காட்சி மற்றும் அரசுத்துறைகளின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்குகளை திறந்து வைத்து பார்வையிட்டார். தொடர்ந்து, சுற்றுலா துறையின் சார்பில் படகு சவாரியை தொடங்கி வைத்தார்.
வல்வில் ஓரி விழாவில் கொல்லிமலை தாவரவியல் பூங்காவில் தோட்டக்கலை துறையின் சார்பாக மலர் மற்றும் மருத்துவப் பயிர்கள் கண்காட்சி சிறப்பான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இம்மலர் கண்காட்சியானது ஆகஸ்ட் 2 மற்றும் 3 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற உள்ளது.
மேலும், வனத்துறை, காவல்துறை, வேளாண்மை துறை உள்ளிட்ட 23 அரசு துறைகளின் சார்பில் அரசின் திட்டங்கள் குறித்த பணி விளக்க கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்நிகழ்ச்சியில் கொல்லிமலை அட்மா குழு தலைவர் எஸ்.செந்தில் முருகன், மாவட்ட சுற்றுலா அலுவலர் மு.அபராஜிதன், மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குநர் எம்.புவனேஸ்வரி, கொல்லிமலை வட்டாட்சியர் சந்திரா, கொல்லிமலை வட்டார வளர்ச்சி அலுவலர் ஈஸ்வரன் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் உள் ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவ மாணவியர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?