
சென்னை:
குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக நீதி மன்றங்கள் பிறப்பிக்கும் பிடிவாரண்ட்களைத் தாமதப் படுத்தாமல், குறித்த நேரத்தில் செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குற்ற வழக்கில் நீதிமன்றம் பிறப்பித்த பிடிவாரண்ட்டை அமல்படுத்தக் கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளர் தாக்கல் செய்த அறிக்கையில், மாநிலம் முழுவதும் 73 ஆயிரத்து 699 வழக்கு கள், பிடிவாரண்ட் நிலையில் நிலுவையில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், 1985-ஆம் ஆண்டு வழக்குகளும் உள்ளன. 1985 முதல் 2024 வரை 61 ஆயி ரத்து 301 வழக்குகளில் பிடிவாரண்ட்கள் அமல்படுத்தப் படவில்லை எனவும் தலைமைப் பதிவாளர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கை விசாரித்த நீதிபதி வேல்முருகன், 61 ஆயிரம் வழக்குகளில் பல ஆண்டுகளாகப் பிடிவாரண்டை அமல்படுத்தாமல் இருப்பது குறித்து அதிர்ச்சியைத் தெரி வித்தார். இது நீதிபரிபாலன முறையைப் பலவீனப்படுத்தி விடும் எனக் குறிப்பிட்ட நீதிபதி, எதிர்காலத்தில் பிடி வாரண்ட்களைத் தாமதப்படுத்தாமல், குறித்த நேரத்தில் அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல் துறைக்கு உத்தரவிட்டார். இதேபோல மாநிலம் முழுவதும் உள்ள நீதிமன்றங்களிலும் ஆய்வு செய்து அறிக்கை அளிக்க பல்வேறு மாவட்ட நீதிமன்றங்களில் தலைமை நிர்வாக அதிகாரி யாக பணியாற்றி ஓய்வுபெற்ற மகேஷ் பாபுவை ஒருங்கிணைப்பு அதிகாரியாக நியமித்து நீதிபதி வேல்முருகன் உத்தரவிட்டார்.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?