நாமக்கல் மாவட்டத்தில் ரூ.90 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் அதிநவீன தானியங்கி பால்பதன ஆலை பணி 90% நிறைவு: கலெக்டர் துர்காமூர்த்தி

நாமக்கல் மாவட்டத்தில் ரூ.90 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் அதிநவீன தானியங்கி பால்பதன ஆலை பணி 90% நிறைவு: கலெக்டர் துர்காமூர்த்தி

நாமக்கல், ஆக. 2–


நாமக்கல் மாவட்டம் மோகனூர் சாலை லத்துவாடியில் கலெக்டர் துர்காமூர்த்தி ரூ.90 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் அதிநவீன தானியங்கி பால்பதன ஆலையின் கட்டுமானப் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.


நாமக்கல் மாவட்டத்தில் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் மற்றும் நுகர்வோர் நலன் கருதி அனைத்து வசதிகளுடன் கூடிய 2.0 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தானிங்கி நவீன பால்பண்ணை அமைக்க வேண்டியது அவசியமானதாகும்.


அந்த வகையில், தமிழ்நாடு அரசு 2022-–2023-ம் ஆண்டு பால்வளத்துறை மானிய கோரிக்கையின்போது, மானியக்கோரிக்கை எண்-8ன் படி, பால்வளத்துறை அமைச்சர், நாமக்கல் மாவட்டத்தில் 2.0 லட்சம் லிட்டர் கையாளும் திறன்கொண்ட தானியங்கி நவீன பால்பண்ணை கட்டுவதற்கு அறிவிப்பினை வெளியிட்டார்.


அதனைத் தொடர்ந்து, கடந்த 22.10.2024 அன்று முதலமைச்சரால், பால்பதன ஆலை அமைப்பதற்காக கட்டிட பணிகள் அடிக்கல் நாட்டப்பட்டு, பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் கட்டிடப் பணிகளுக்கு ரூ.32.50 கோடியும், இயந்திரங்கள் கொள்முதல் செய்வதற்கு ரூ.57.50 கோடியும் என ரூ.90 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


இயந்திரங்கள் 90% கொள்முதல்


தற்பொழுது கட்டிட பணிகள் 80 சதவீதம் நிறைவுள்ளது. இயந்திரங்கள் 90 சதவீதம் கொள்முதல் செய்யப்பட்டு 40 சதவீதம் நிறுவப்பட்டுள்ளது. பால் பண்ணை அமைக்கும் பணி முழுமையாக நிறைவு செய்யப்பட்டு, இதற்கான சோதனை ஓட்டம் நவம்பரில் மேற்கொண்டு டிசம்பருக்குள் அனைத்து பணிகளும் நிறைவடையும்.


மேலும், ஜனவரி-யில் நாமக்கல் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் ஒன்றிய பால் பதன ஆலை மூலம் தயாரிக்கப்படும் பால் மற்றும் பால் உப பொருட்கள் மக்கள் பயன்பாட்டிற்கு சென்றடையும் வகையில் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், நாமக்கல் மாவட்டத்தில் புதிய பால்பண்ணை பயன்பாட்டிற்கு வரும் பொழுது மாவட்டத்தில் உள்ள 15,000 பால் உற்பத்தியாளர்கள் மற்றும் சுமார் 4 லட்சம் நுகர்வோர் பயனடைவார்கள். மேலும் நாமக்கல் மாவட்ட மக்களுக்கு ஆவின் பால் மற்றும் பால் உபபொருட்கள் தங்குதடையின்றி கிடைப்பதோடு, 1000 பேருக்கு மறைமுக வேலைவாய்ப்பும் கிடைக்க வாய்ப்புள்ளது.


அதனைத் தொடர்ந்து கலெக்டர் துர்காமூர்த்தி, அதிநவீன தானியங்கி பால்பதன ஆலை கட்டுமானப் பணிகளை நேரில் பார்வயிட்டு ஆய்வு மேற்கொண்டு, பணிகளை விரைந்து முடித்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.


இந்நிகழ்ச்சியில், பொது மேலாளர் (ஆவின்) ஆர்.சண்முகம், துணைப்பதிவாளர் (பால்வளம்) சண்முகநதி உட்பட துறைச்சார்ந்த அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.



Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%