திருவண்ணாமலை மாவட்டம் டிசம்பர்- 14 போளூர் கைலாசநாதர் திருக்கோயில் கும்பாபிஷேகத்திற்கு காஞ்சி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் முன்னிலையில் போளூர் கைலாசநாதர் கோவில் கோபுர கலசங்களை ஸ்ரீ வாசவி கன்யகா பரமேஸ்வரி அம்மன் ஆலயத்திற்கு எடுத்து வந்து 35 சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஒலிக்க நம் வாசவி அம்மன் ஆலயத்தில் யாகத்தில் இடப்படும் ஓம திரவியங்களை வைத்து பூஜை செய்தார்கள்.பின்னர் ஆர்ய வைஸ்ய ஆண்கள், பெண்கள் அவைகளை கலசத் தேரின் முன்னாள் வீதி ஊர்வலமாக கைலாசநாதர் கோவிலுக்கு எடுத்துச் சென்று சமர்ப்பித்தார்கள். இன்று காலை கைலாசநாதர் கோவில் கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெற்றது. ஏராளமான பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு கும்பாபிஷேக விழாவில் சாமி தரிசனம் செய்தார்கள். தமிழ்நாடு இ பேப்பர் செய்தியாளர் நிர்மலா ஸ்ரீதர் திருவண்ணாமலை.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?