
குமாரபாளையம், ஆக. 25–-
குமாரபாளையத்தில் நடைபெற்ற 30 பள்ளிகள் பங்கேற்ற கோ கோ விளையாட்டு போட்டியில் ராயல் இன்டர்நேஷனல் பள்ளி மாணவ மாணவிகள் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றனர்.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் இன்டர்நேஷனல் பள்ளியில் நாமக்கல், ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களைச் சேர்ந்த சிபிஎஸ்இ பள்ளி மாணவ மாணவிகள் பங்கேற்ற கோ கோ விளையாட்டு போட்டிகள் குமாரபாளையம் ராயல் இன்டர்நேஷனல் பள்ளியில் நடைபெற்றது.
இரண்டாவது ஆண்டாக ஈரோடு சஹோதய கூட்டமைப்பு நடத்திய இந்த போட்டிகள் இரண்டு நாட்கள் நடைபெற்றது. மூன்று மாவட்டங்களைச் சேர்ந்த 30 சிபிஎஸ்இ பள்ளிகளைச் சேர்ந்த சுமார் 1000 மாணவ மாணவிகள் இந்தப் போட்டிகளில் பங்கேற்று விளையாடினர்.
ராயல் இன்டர்நேஷனல் பள்ளியின் தாளாளர் அன்பழகன் விளையாட்டுப் போட்டியை துவக்கி வைத்து பேசினார். பள்ளியின் செயலாளர் முருகேசன், பொருளாளர் கவிதா ஆனந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முதல்வர் ராஜஸ்ரீ அனைவரையும் வரவேற்றுப் பேசினார். பள்ளி மாணவ மாணவிகளின் வயதுக்கு ஏற்ப 12,14, 16 மற்றும் 19 வயதுக்கான நான்கு பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன. இந்த நான்கு பிரிவுகளிலும் மாணவ மாணவிகள் அனைத்து பிரிவுகளிலும் அதிக புள்ளிகளை குவித்த ராயல் இன்டர்நேஷனல் பள்ளி மாணவ மாணவிகள் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றனர். ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை வென்ற பள்ளி மாணவ மாணவிகளை ராயல் இன்டர்நேஷனல் பள்ளி நிர்வாகிகள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?