சின்னத் தம்பி சபதமெடு
சிலருக்கு எழுத பழகிக் கொடு!
கண்னென கல்வியை கருதிவிடு
கல்லாதவருக்கு கற்றுக் கொடு!
உன்னிடம் உள்ள அறிவு தனை
உலகில் பலருக்கு பகிர்ந்திட்டால்
மண்ணில் பலரும் உயர்ந்திடுவார்,
மாற்றம் தனையே அடைந்திடுவார்!
கண்ணில் லோற்கு கண்தானம்
கடும் பசியோர்க்கு அன்னதானம்!
உயிரைக் காக்க ரத்த தானம்,
உடலை காக்க உடை தானம்...
இன்னும் இது போல் தானமுண்டு
இத்தனை தானத்தில் சிறந்ததெது?
கல்வி தானமே உயர்ந்ததென்று,
கருத்தில் நிறுத்தி கற்றுக் கொடு!
வெ.தமிழழகன் எம்ஏ. பிஎட்,
சேலம்
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%