பிரியத்தை கேட்டால்
பிரிவை மட்டுமே தருகிறாயே ?
உனக்கொன்று தெரியுமா ?
இப்பிரபஞ்சத்தில்
உயிரற்று கிடக்கும்
ஒரு சிறு துரும்பு கூட
உன் நினைவுகளை
தூசி தட்டி விட்டு தான் செல்கிறது .
என் கற்பனைகள்
கஞ்சத்தனமின்றி
கட்டுக்கடங்காமல்
உன்னை சுற்றியே வலம் வருகின்றது.
காதல் வாழ்க்கையின்
ஒரு பக்கமாம்
யார் சொன்னது ?
என் வாழ்க்கை பக்கங்கள் எல்லாம்
நீயே நிறைந்திருக்கிறாய்
உன்னை சந்தித்து
பின்னர் சிந்தித்து
என்றும்
நொந்து கொண்டது எல்லாம் போதுமடி
வரம் நீ
சாபம் ஏனடி
எனக்கு பரிசாக தந்தாய் ?
அந்த கருணையுள்ள
கடவுளிடம்
நேருக்கு நேராய்
உரக்கச் சொல்கிறேன்
கண்ணை மூடி
தவமிருக்க வேண்டுமா ?
பட்டினி கிடந்து
விரதமிருக்க வேண்டுமா ?
கை நரம்புகளை கிழித்து கொண்டு
இரத்த அபிஷேகம்
செய்ய வேண்டுமா ?
அவளுக்காக
எதையும் செய்வேன்
அவளை இழப்பதை தவிர
இன்னொரு ஜென்மமாவது
அவள் பிரியத்தை
பிரியாத வரம் கொடு இறைவா !
நீ ஈவு ,இரக்கமுள்ளவன் என்று
என் கல்லறையின் மேல்
இறுதி சாசனம்
எழுதி விட்டுச் செல்கிறேன்.
நௌஷாத் கான் .லி
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?