இதயம் கண்டவளை
வேறொருத்திக்கு
கணவனாய் ஆன போதும்
அடங்கா பேரன்போடு
உலகில் இல்லாத அவளை
அனுதினமும் தேடி கொண்டிருக்கிறேன்
உன்னை போல எவளும் -இப்
பிரபஞ்சத்தில் பிறக்க போவதுமில்லை
தேடி கொண்டிருக்கும் உன் வெட்கத்தில்
வாடியிருக்கும் என் முகங்கள்
பூத்த கதையெல்லாம்
அவ்வளவு சீக்கிரத்தில் மறந்து போகாது....
இரவென்றால் உறக்கம் தொலைத்து
காகித கவிதைகளில்
திளைத்த நாட்களெல்லாம்
உன்னால் மட்டுமே சாத்தியம்
பாக்கெட்டில் பத்து பைசா இல்லாத போதும்
குபேரனாய் உணர வைத்தவள் நீ மட்டும் தானடி
ஒரு மயிரும் இவ்வுலகை பற்றி அறியாத
மக்கு சாம்பிராணியை எல்லாம்
ஊர் மெச்சி புகழ்ந்து பாடுமளவுக்கு
கவிதை எழுத வைத்த பெருமை
உன் கண்களுக்கு மட்டும் தானடி போய் சேரும்
பொக்கிஷமாய் உன்னை நினைத்தேன்
பரிசாய் உன் நினைவுகள் மட்டும் தான்
என்னிடத்தில் மிச்சம் இருக்கின்றன
சதை -தசை -நாடி -நரம்பெல்லாம்
பித்து பிடித்து போதை ஏறி கிடக்கிறது
உன் ஞாபகங்கள்
எவளை கட்டியிருந்தாலும்
எவளோடு ஊருக்காக வாழ்ந்திருந்தாலும்
உன்னோடு கனவுலகில் வாழ்ந்த
ஒரு நொடி வாழ்க்கைக்கு ஈடாகுமா ???
வாழ்க்கைக்கு ரிவர்ஸ் பட்டன் இல்லை இருந்திருந்தால்
ஈவு இரக்கமற்ற கடவுளிடம்
மண்டியிட்டு கேட்டிருப்பேன்
இதயம் நேசித்த -உன் நிழலை யாசித்த
அந்த காதல் வாழ்க்கையை
திரும்ப தா என்று !!
குந்தவை
எங்கே போனாலும்
தங்கமே-என்
அங்கம் தொட்டால்
நீதான் என நானறிவேன்
இதுவரை
எதையும் கூட
வைத்து கொள்ள ஆசைப்பட்டதில்லை
குந்தவை உன்னைத் தவிர!
நந்தினி
கல்கி காணாத நந்தினியே
எத்தினி பெண்கள்
இப்பிரபஞ்சத்தில் பிறந்தும்
பித்தெல்லாம்
பத்தினியான
உன் மீது தான்!
என் கழுத்தறுக்க
வாள் எதற்கு?
நாகப்பாம்பாய் கொல்லும்
உன் கடைக்கண்
விஷப்பார்வை
ஒரு துளி போதுமடி!
என்னை கொன்று
பாவம் சேர்த்து கொள்ளாதே
நானில்லாத இதயம்
உனதுஎன நானறிந்தால்
என்னை நானே
மார்பு பிளந்து
குத்தி கொண்டு சாகிறேன்.
எனக்காக
ஒரு துளி கண்ணீர் கொடு
நமது காதல் பரிசாக!
கோடீஸ்வரன்
நீ பரிசாய் தந்த
கண்ணீரையெல்லாம்
விற்பனைக்கு வைத்தால்
இவ்வுலகின்
முதல் கோடீஸ்வரன் நான் தானடி!
ஏனோ
என்னை போலவே
என் கண்ணீரும்
மதிப்பிழந்து போனது!
காதல் பார்வை
பக்குவமாய் எடுத்து தந்த
பனிக்கூழ்
உருகி தான் போனது
உன் காதல் பார்வையில்!
குல்பி
பழங்களின் பல்பியே-எனை
குல்பியாக்கி
இரவுகளில் திண்ணாதே
சொட்டும் சிரிப்புகளுக்கே
சிதைந்து போனேனே
தேள் கண்களால் கொட்டியிருந்தால்
செத்து போயிருப்பேனோ?!
நௌஷாத் கான் .லி
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?