மழை

மழை


-------------

வானமென்னும்

பெருஞ்சல்லடை

தண்ணீரைச்சலிக்கிறதோ மழைத்துளிகள்!


உருண்டு திரண்ட

கார்மேக வெண்ணெய்

சூட்டில் உருகாமல்

சிலுசிலுவெனக்

குளிரில் உருகும் மாயமென்ன?!


ஆகாயத்தில்

வாள்வீச்சுகளுடன்

இடிமுரசு கொட்ட

அதிரடி படையெடுப்புகள்

வெள்ளமாய் அணிதிரண்டு

ஆக்கிரமிப்புகள் செய்த

மனிதனை

முற்றுகையிடுகிறது!


கவிஞர் த.அனந்தராமன்

துறையூர்

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%