அடித்தாலோ.. மிதித்தாலோ கொத்துவது பாம்பின் குணம்.!
அதன் வழியே போகவிட்டால் அதன் போக்கில் சென்றுவிடும்!
வேட்டையாடி கொல்லுவது புலியின் குணம்.. வெள்ளாந்தியாய் அலைந்து மாமிசத்தை புசிக்காது மானின் குணம்!
பனிநீரை குடித்தப்படி பசும்புள்ளில் விளையாடி பட்டுப்போல் குதித்தோடும் முயலின் குணம்!
ஆற்றினிலே குளத்தினிலே கால்வைத்தால் வேட்டையாடும் முதலை குணம்.!
கூற்றுவனாய் காத்திருந்து குழிப்பறித்து பாய்வதுவோ குள்ளநரி பிறவிக்குணம்!
ஓடுமீன் ஓட உருமீன் வருமளவும் காத்திருந்து கொத்துவது கொக்கு குணம்!
உயர உயரப் பறந்தாலும் உச்சியிலே இருந்தபடி இரைகண்டால் தவறாது தாக்குவது கழுகின் குணம்.!
ஊர்வன பறப்பன நகர்வன யாவினுக்கும் வெவ்வேறு குணம் தந்தான் இறைவன்..
அனைத்தையும் ஒன்றிணைத்து.. அவன் ஒரு உருவம் தந்தான்..
நரியதன் சூழ்ச்சி.. தாவும் நாட்டியக் குரங்கின் அட்டகாசம்.. கரியதன் பிளறல்.. பதுங்கி இருந்து பாயும் புலியதன் பாய்ச்சல்
சோந்தியின் மாறும் தன்மை.. உருவமே மனிதனாக உலகிலே இறைவன் படைத்தான்!
நன்மையும் அவனின் குணமாம்.. தீமையும் அவனின் குணமாம்.. உண்மையில் இறைவன் படைப்பில் அதிசயம் மனிதன்தானே.!
*வே.கல்யாண்குமார்.*
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?