சிகரம் தொடு

சிகரம் தொடு



சூரிய உதயம் முன்பே நீ 

சுறுசுறுப்பாக எழுந்து விடு!

சுடரில் மின்னும் பொன் போல 

சுடர்ந்தே அறிவெனும் கொழுந்து விடு!  


தூறிய மேக  வான்போல் நீ 

தூயதை பொழிந்திட பழகிவிடு!

தூவானம் போல் பயனின்றி 

தொடரும் நட்பை விலக்கிவிடு!


ஆறிய நெருப்போ குளிர் காய 

ஆகா தென்பதை புரிந்து விடு!

ஆற்றல் கொண்ட அறிவோடு

ஆக்கம் செய்திட தெரிந்து விடு!


ஊறிய மண்ணில் விதை போல  

ஊன்றி முளைத்திட கற்று விடு!

ஊறுகள்  யாருக்கும் செய்யாமல் 

உயர்வெனும் சிகரம் தொட்டுவிடு!


வெ.தமிழழகன், எம் ஏ பி ஏட் 

 சேலம்

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%