சிக்கலை தீர்க்கும் சிங்கார வேலன்

சிக்கலை தீர்க்கும் சிங்கார வேலன்

*சிக்கலை தீர்க்கும் சிங்கார வேலன்.. வேல் வாங்கும் போது முருகனுக்கு வியர்க்கும் அதிசயம் ?.* 



தன் திருமேனி எங்கும் வியர்வை வழியக் காட்சி தரும் முருகனை சிக்கல் திருத்தலத்தில்தான் தரிசிக்கமுடியும்.


முருகப்பெருமானைக் காண பாதயாத்திரை மூலமாகவும் மலை ஏறியும் வியர்க்க வியர்க்க வரும் பக்தர்களை எல்லா ஊர்களிலும் பார்க்கலாம். ஆனால், தன் திருமேனி எங்கும் வியர்வை வழியக் காட்சி தரும் முருகனை சிக்கல் திருத்தலத்தில்தான் தரிசிக்கமுடியும்.


"சிக்கலில் வேல் வாங்கி செந்தூரில் சம்ஹாரம்' என்பது சொலவடை. கந்த சஷ்டி திருநாளில் சூரசம்ஹார நிகழ்வுக்கு முதல் நாள் பஞ்சமி அன்று சிக்கல் திருத்தலத்தில் அன்னையிடம் வேல் வாங்குவார் சிங்காரவேலவர். தன் சக்தியையெல்லாம் உருவேற்றி வேலாயுதமாக நெடுங்கண்ணி அம்மை தர, அந்தப் பரவசத்தில் முருகப்பெருமானுக்கு உடல் எங்கும் வியர்த்துக் கொட்டும்.

வருடா வருடம் வேல் வாங்கியவுடன் கிட்டத்தட்ட மூன்று மணி நேரத்துக்கு வியர்வை வடியும் வேலனாக அருள்புரிகிறார் சிக்கலைத் தீர்க்கும் சிங்கார வேலவர்!


நாகப்பட்டினத்தில் இருந்து திருவாரூர் செல்லும் மார்க்கத்தில் ஐந்தாவது கிலோமீட்டரில் இருக்கிறது இந்த ஊர். "அழகிய சிக்கல் சிங்காரவேலவா' என்று அருணகிரிநாதரால் திருப்புகழில் புகழப் பெற்ற ஊர். திருஞானசம்பந்தர், சுந்தரரால் தேவாரப் பாடல் பெற்ற ஊர். கந்தசஷ்டி திருநாள் அன்று மட்டும் அனைத்து பக்தர்களும் கருவறைக்கு உள்ளே சென்று மிக அருகில் முத்து முத்தாக வியர்வை அரும்பிக் கொண்டே இருக்கும் முத்துக்குமரனை வலம் வந்து வணங்கலாம்; நம் வினை எல்லாம் களையலாம்.




சி.முத்து லட்சுமணன்

போச்சம்பள்ளி


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%