ராமனூத்து அரசு ஆரம்பப்பள்ளி தலைமையாசியருக்கு எழுத்தாளுமை விருது வழங்கி கௌரவிப்பு

ராமனூத்து அரசு ஆரம்பப்பள்ளி தலைமையாசியருக்கு எழுத்தாளுமை விருது வழங்கி கௌரவிப்பு



கோவில்பட்டி சங்கரவள்ளிநாயகம் அறக்கட்டளை சார்பாக கோவில்பட்டி காந்தி மண்டபத்தில் பாரதியாரின் 144 வது பிறந்த தின விழா மற்றும் விருது வழங்கும் விழா நடைபெற்றது.விழாவிற்கு அறக்கட்டளை நிறுவுநர் திருமலை முத்துச்சாமி தலைமை தாங்கினார். ஒவ்வொரு ஆண்டும் கல்வி, சமூகப்பணியில் சிறந்து விளங்கும் ஆசிரியர்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்களுக்கு எழுத்தாளுமை விருதும் ,பேராளுமை விருதும் வழங்கி கௌரவிக்கப்பட்டது இந்தாண்டிற்கான "எழுத்தாளுமை விருது " எட்டையபுரம் அருகே உள்ள இராமனூத்து அரசு ஆரம்பப்பள்ளி தலைமையாசிரியர் மு.க.இப்ராஹிம் அவர்களுக்கு வழங்கப்பட்டது.விருதினை கோவில்பட்டி கல்வி மாவட்ட அலுவலர் கவிஞர் பாஸ்கரன், அறக்கட்டளை நிறுவனர் திருமலை முத்துசாமி ஆகியோர் வழங்கினர். விழாவில் பாரதி பற்றிய கவியரங்கம், மாணவ மாணவியர்கள் பேச்சுப் போட்டி ,கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. முனைவர் முருக சரஸ்வதி கவிஞர்கள் நிர்மலா ஜெயபாரதி ஆகியோர் விழாவினை ஒருங்கிணைத்தனர்.கவிஞர் வேல்முருகன் நன்றி கூறினார்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%