சிரித்து மகிழுங்கள்...

சிரித்து மகிழுங்கள்...

🔘என் பூட்டை உடைத்து 5 லட்சம் கொள்ளை அடித்து விட்டார்கள்! 

🔗பூட்டுக்குள் எப்படிடா 5 லட்சம் வைத்திருந்தாய்?

........................................................................

☑படிச்சி முடிச்சப்புறம் என்ன செய்ய போறே?

🔗புக்கை மூடிடுவேன்!

........................................................................

🔘காலில் என்ன காயம்?

🔗செருப்பு கடித்து விட்டது

🔗பின்ன அதை மிதிச்சா அது சும்மா இருக்குமா!

..............................................................

☑குளிச்ச பிறகு எதுக்கு தலையை துவட்டுறோம்?

🔗தெரியல, குளிக்கும் போதே துவட்ட முடியாதே!

.......................................................................

🔘இரண்டு இட்லியைக் கூட முழுசா சாப்பிட முடியல டாக்டர்..?

🔗என்னாலையும் முழுசா இரண்டு இட்லி சாப்பிட முடியாது, புட்டு புட்டுதான் சாப்பிடனும்!

...........................................................................

☑டேய்! ஒரு 10 ருபாய் இருந்தா கொடு

🔗என்னிடம் சுத்தமா இல்ல

🔗பரவாயில்லை கொடு, நான் சுத்தம் பண்ணிக்கிறேன்!

....................................................................

🔘இந்த ஊரில் தங்க வீடு கிடைக்குமா..?

🔗கிடைக்காது.. கூரை வீடு, ஓட்டு வீடு, மாடி வீடுதான் கிடைக்கும்!

..............................................................

☑சர்தார்: தம்பி நீ என்ன படிச்சிருக்க?

பையன்: பி.எ.

சர்தார்: அடப்பாவி, படிச்சதே ரெண்டு எழுத்து அதையும் தலை கீழா படிச்சிருக்கே!

.................................................................

🔘இன்டெர்வியு, சேல்ஸ் மேனேஜர்: உங்களுக்கு எதாவது விற்பனை அனுபவம் இருக்கிறதா?

🔗 ஒ! நிறைய என் வீடு, கார் மற்றும் என்னுடைய

மனைவியின் அனைத்து நகைகளுமே விற்றிருக்கிறேன்!

................................................

⭕⭕⭕⭕⭕⭕⭕⭕

உன்னை யாரவது லூசுன்னு சொன்னா கவலை படாதே !

வருத்த படாதே !

ஃபீல் பண்ணாதே !

உங்களுக்கு எப்படி தெரியும்ன்னு கேள் !

⭕⭕⭕⭕⭕⭕⭕⭕

காதல் ஒரு மழை 

மாதிரி ,

நனையும் போது சந்தோஷம்,

நனைந்த பின்பு ஜலதோஷம்..

⭕⭕⭕⭕⭕⭕⭕⭕

மகனே பரிட்சையில் எத்தனை கேள்வி வந்தது ?..

ஐந்து கேள்விப்பா..

நீ எத்தனை கேள்வி விட்டுட்டே ?..

முதல் மூணும், கடைசி இரண்டும்..

வெரிகுட் கீபிடப்...

⭕⭕⭕⭕⭕⭕⭕⭕

டேய் என் ஜாதகப்படி எனக்கு அறிவு ரொம்ப ஜாஸ்தியாம்..இப்பவாவது தெரியுதா நான் ஏன் ஜாதகத்தை நம்புறதில்லைன்னு ???

⭕⭕⭕⭕⭕⭕⭕⭕

என்னங்க ஏன் அடிக்கடி சமையல் ரூம் பக்கம் போகிறீங்க ?..

டாக்டர் தான் சுகர் இருக்கான்னு அடிக்கடி செக் பன்னிக்க சொன்னார் அதான்..

⭕⭕⭕⭕⭕⭕⭕⭕

நீங்க உடனடியா மீன் , ஆடு , கோழி சாப்பிடுவதை நிறுத்த வேண்டும்...

அதுக சாப்பிடுவதை நான் எப்படி நிறுத்த முடியும் டாக்டர் ...

⭕⭕⭕⭕⭕⭕⭕⭕

டாக்டர் என் மனைவி ஓவரா டி.வி பாக்குறா.. ”எந்த அளவுக்கு பாக்குறாங்க?”..

கரண்ட் கட்டானாலும் , டார்ச் அடிச்சி பாக்குறா..

⭕⭕⭕⭕⭕⭕⭕⭕

நம்ம பையன் எங்க பணம் வைத்தாலும் எடுத்திட்டு போயிடறாங்க..

அவனுடைய காலேஜ் புத்தகத்தில் வை பத்திரமா இருக்கும்..

⭕⭕⭕⭕⭕⭕⭕⭕

ஒரு காப்பி எவ்வளவு சார் ?..

5 ரூபாய்..

எதிர்த்த கடையில 50 காசுன்னு எழுதியிருக்கே ?...

டேய். சாவுகிராக்கி அது XEROX காப்பிடா !!!!

⭕⭕⭕⭕⭕⭕⭕⭕

உங்க கிட்னி பெயில் ஆகிடுச்சு....

நான் என் கிட்னிய படிக்க வைக்கவே இல்லயே டாக்டர் அது எப்படி பெயில் ஆகும்..

⭕⭕⭕😁😁😁

தனியாக சிரிக்க வேண்டாம். குடும்பம் முழுவதும் கூடி இருந்து சிரித்து மகிழுங்கள்...

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%