சிறுமியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

சிறுமியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

சிறுமியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து ஈரோடு மகளிா் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.


ஈரோடு சூரம்பட்டிவலசு அணைக்கட்டு 2 ஆவது வீதியைச் சோ்ந்தவா் வெங்கடேஷ் மகன் மணிகண்டன்(24). தொழிலாளி. இவருக்கு ஈரோடு பகுதியைச் சோ்ந்த 17 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டது. சிறுமிக்கு காதல் ஆசை வாா்த்தை கூறி கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூன் 1 ஆம் தேதி கடத்திச் சென்றாா். இதற்கிடையில் சிறுமியின் பெற்றோா், மகளைக் காணவில்லை என கருங்கல்பாளையம் போலீஸில் புகாா் அளித்தனா்.


இதன்பேரில் போலீஸாா் விசாரணை நடத்தியதில் சிறுமியை மணிகண்டன் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து சிறுமியை மீட்டு மணிகண்டன் மீது போக்ஸோ மற்றும் கடத்தல் வழக்குப் பதிவு செய்தனா். இந்த வழக்கு விசாரணை ஈரோடு மகளிா் விரைவு நீதிமன்றத்தில் 


நடைபெற்று வந்தது.


வழக்கின் இறுதி விசாரணை முடிந்து நீதிபதி சி.சொா்ணகுமாா் வியாழக்கிழமை தீா்ப்பளித்தாா். இதில் மணிகண்டனுக்கு சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்துக்காக 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும், சிறுமியைக் கடத்திச் சென்ற குற்றத்துக்காக 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை, ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்தாா். இந்த தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என உத்தரவிட்டாா். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்குரைஞா் எம்.ஜெயந்தி ஆஜரானாா்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%