15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவ ருக்கு ஆயுள் தண்டனை விதித்து உதகை மகிளா நீதிமன்றம் உத்தரவிட்டது. நீலகிரி மாவட்டம், கூடலூர் பகுதியைச் சேர்ந்தவரின் மூத்த மகள் கல்லூரியிலும், 15 வயது இளைய மகள் அதே பகுதியிலுள்ள ஒரு தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பும் படித்து வந்தனர். விவசாயியின் நண்பரான அதேபகுதியை சேர்ந்த உஸ்மான் (55), என்பவர் அடிக்கடி பல்வேறு கார ணங்களுக்காக விவசாயி-யின் வீட்டுக்கு சென்று வந்துள் ளார். ஒரு கட்டத்தில் அவரது வீட்டிற்கு சென்ற உஸ்மான், வீட்டில் யாரும் இல்லாததை அறிந்து, தனியாக இருந்த 15 வயது மாணவியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுகுறித்து யாரிடாமாவது கூறினால் கொலை செய்து விடுவதாக சிறுமியை மிரட்டியுள்ளார். இச்சம்பவத்தை பயன்படுத்தி பலமுறை மிரட்டி சிறுமியை பாலியல் வன் கொடுமை செய்துள்ளார். அந்த சமயங்களில் வலுக்கட்டாய மாக கருத்தடை மாத்திரைகளையும் கொடுத்துள்ளார். இது குறித்து சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்த நிலையில், தேவர்சோலை காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி, போக்சோ சட்டத் தில் வழக்குப்பதிவு செய்து கடந்த 2020 ஆம் ஆண்டு பிப்.17 ஆம் தேதி உஸ்மானை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை உதகை மகிளா நீதிமன்றத் தில் நடைபெற்று வந்த நிலையில், தற்போது தீர்ப்பு வழங்கப் பட்டது. அதில், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த உஸ்மானுக்கு ஆயுள் தண்டனையும், 10 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி எம்.செந்தில் குமார் உத்தரவிட்டார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு சார்பில், ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க நீலகிரி ஆட்சியருக்கு அறிவுறுத்தியுள்ளார். இதைத்தொடர்ந்து உஸ்மான் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?