சீர்காழி , டிச , 08 - மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகரில் அமைந்துள்ள சபாநாயக முதலியார் இந்து மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் டிசம்பர் 5 தேதி அன்று உலக மண் தினம் தமிழக பள்ளிக்கல்வித்துறை உத்தரவின் படி அனுசரிக்கப்பட்டது. அதனை முன்னிட்டு பள்ளி வளாகத்தில் பள்ளி உதவி தலைமை ஆசிரியர் என். துளசிரங்கன் தலைமையில் பள்ளி தலைமை ஆசிரியர் எஸ். முரளிதரன் மரக்கன்று நட்டார். நிகழ்ச்சியில் பள்ளி முதுகலை ஆசிரியர் ஜி.சுந்தர்ராஜன், பள்ளி அமைப்புகளான தேசிய பசுமைப்படை மற்றும் சுற்றுச்சூழல் மன்றம் ஆகிய அமைப்புகளை சார்ந்த மாணவர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாட்டினை பள்ளி சுற்றுச்சூழல் மன்ற பொறுப்பாசிரியர் எஸ். ரமேஷ் ஏற்பாடு செய்திருந்தார். நிறைவாக பள்ளி தேசிய பசுமை படை பொறுப்பாசிரியர் கே. வாசுதேவன் நன்றி கூறினார்.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?