வலங்கைமான் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மேலாண்மைக் குழு கூட்டம்
Dec 07 2025
40
வலங்கைமான் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மேலாண்மைக் குழு கூட்டம் நடைபெற்றது.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மேலாண்மைக் குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மேலாண்மைக் குழு தலைவர் எஸ்.சுமத்ரா தலைமை வகித்தார், கூட்டத்தில் பள்ளியின் தலைமை ஆசிரியர் மு.நாவளவன், பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் க.செல்வம், பொருளாளர் சிங்குதெரு எஸ்.ஆர். ராஜேஷ், மேலாண்மைக் குழு துணை தலைவர், உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர். கூட்டத்தில் கீழ் கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
01.இடைநின்ற மாணவர்களைப் பள்ளிக்கு அழைத்து வருவோம் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
02.ஆதார் முக்கியத்துவம் மற்றும் புதுப்பித்தல் சார்ந்த தகவல்களை அறிந்து அனைத்து மாணவர்களும் பயோ மெட்ரிக் புதுப்பிக்கப்பட்ட ஆதார் பெறுவதை உறுதி செய்ய தீர்மானிக்கப்பட்டது.
03.மாணவர்களின் எண்ணிக்கையை கருத்தில் கொள்ளாமல் பயிற்று மொழி பாடப்பிரிவுகளின் எண்ணிக்கை அடிப்படையில் 4 வகுப்பறை கட்டித்தர அரசிடம் கோரிக்கை வைப்பது என்று தீர்மானிக்கப்பட்டது.
04. மாணவர் வருகை
தாமதத்தை குறைக்க பள்ளிக்கு காலை வழிபாட்டுக் கூட்டத்திற்கு வரும் மாணவர்களை கண்டறிந்து குறிப்பிட்ட நேரத்திற்கு பள்ளிக்கு வர ஆலோசனை வழங்குவது என்று தீர்மானிக்கப்பட்டது.கூட்டத்தில் ஏராளமான பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?