சுகாதாரத்துறை, மாநகராட்சி அதிகாரிகள், மளிகைக் கடை உரிமையாளர்களுடன் சென்னை காவல்துறை கலந்தாய்வு
Aug 20 2025
11

சென்னை, ஆக. 19–
சென்னையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்களை முழுவதும் கட்டுப்படுத்த நடவடிக்கையாக சென்னை பெருநகர காவல்துறை சார்பில் சுகாதார துறை அதிகாரிகள், மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் மளிகைக் கடை உயரிமை யாளர்களுடன் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஆ.அருண் உத்தரவின்பேரில், சென்னை பெருநகர எல்லைக்குட்பட்ட பகுதிகளில் குட்கா புகையிலைப் பொருட்களை கடத்தி வருபவர்கள், விற்பனை செய்யும் நபர்கள் மீது நடவடிககை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்களுக்கு எதிராக காவல்துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு, போதை பொருட்கள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
இதன் தொடர்ச்சியாக சென்னை பெருநகர காவல் மேற்கு மண்டல இணை ஆணையாளர் அலுவலகத்தில், காவல் இணை ஆணையாளர் திஷாமிட்டல் தலைமையில், அண்ணாநகர், கொளத்தூர், மற்றும் கோயம்பேடு காவல் மாவட்ட துணை ஆணையாளர்கள், மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி, உணவு பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் சுகாதார ஆய்வாளர்களுடன் கலந்தாய்வு கூட்டம் நடத்தப்பட்டது. இக்கூட்டத்தில் ரகசிய தகவல்களின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட வேண்டிய கூட்டு ஆய்வுகள் மற்றும் சோதனைகள் குறித்த வழிமுறைகள் வழங்கப்பட்டன. இக்கூட்டத்தில், பெருநகர சென்னை மாநகராட்சியிலிருந்து 20 உணவு பாதுகாப்பு, மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் பங்கேற்றனர்.
மேலும் புனித தோமையர் மலை காவல் துணை ஆணையாளர் வி.ஆர்.சீனிவாசன் தலைமையில், புனித தோமையர்மலை ஆயுதப்படை கலந்தாய்வு கூடத்தில், வியாபாரிகள் சங்கத்தைச் சேர்ந்த மளிகை கடை உரிமையாளர்களிடம் குட்கா, மாவா போன்ற புகையிலை பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்தும், குட்கா, மாவா போன்ற புகையிலை பொருட்களை விற்பனை செய்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், குட்கா, மாவா போன்ற புகையிலை பொருட்கள் விற்பனை குறித்த தகவல் ஏதேனும் கிடைக்கப்பெற்றால் உடனடியாக காவல் துறையினருக்கு தெரிவிக்குமாறும், இரகசியம் காக்கப்படும என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் வியாபாரிகள் சங்கத்தை சேர்ந்த மளிகை கடை உரிமையாளர்கள் சுமார் 50 நபர்கள், காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?