ஹமாஸ் அமைப்பு ஆயுத கிடங்காக பயன்படுத்திய மருத்துவமனையை தாக்கிய இஸ்ரேல்
Aug 20 2025
13

காசாவில் உள்ள மருத்துவமனை வளாகத்தில் பயங்கரவாதிகள் ஆயுதங்களை பதுக்கி வைத்து வந்துள்ளனர்.
டெல் அவிவ்,
காசாவில் ஒன்றரை ஆண்டுகளாக இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில், 61,900-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் உயிரிழந்து உள்ளனர். 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்தும் உள்ளனர். இதனை காசா சுகாதார அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.
இந்நிலையில், மத்திய காசாவின் ஜெய்துன் பகுதியில் அமைந்த அல்-மாமதனி மருத்துவமனைக்கு வெளியே ஹமாஸ் அமைப்பின் பிரிவு ஒன்று செயல்பட்டு வந்துள்ளது. இதனை இரவில் நடத்திய வான்வழி தாக்குதலில் இஸ்ரேல் பாதுகாப்பு படை அழித்துள்ளது.
இதுபற்றி இஸ்ரேல் பாதுகாப்பு படை வெளியிட்ட எக்ஸ் சமூக ஊடக பதிவில், இந்த மருத்துவமனை வளாகத்தில் பயங்கரவாதிகள் ஆயுதங்களை பதுக்கி வைத்து வந்துள்ளனர். இதனை புகலிடம் போல் அவர்கள் பயன்படுத்தி வந்தனர்.
பொதுமக்கள் மற்றும் மருத்துவமனையை அவர்கள் எப்படி தவறாக பயன்படுத்தி வருகின்றனர். மக்களிடம் சுரண்டலில் ஈடுபடுகின்றனர் என்பதற்கான எடுத்துக்காட்டாக இது உள்ளது என தெரிவித்து இருக்கிறது.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?