சென்னையில் மீண்டும் ஈரடுக்கு பஸ்கள் •20 மின்சார வாகனங்கள் இயக்கம்
Aug 04 2025
11

சென்னை, ஆக.5-
சென்னையில் மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில் ஈரடுக்குபஸ்கள் இயக்கப்பட்டன. கடந்த 2008-ம் ஆண்டு அந்த பஸ்கள் நிறுத்தப்பட்டன.இந்த நிலையில் இப்போது மீண்டும் ஈரடுக்கு பஸ்களை இயக்கஅரசு ஒப்புதல் அளித்துள்ளது. முதல் கட்டமாக 20 மின்சார ஈரடுக்கு பஸ்கள் விடப்படுகின்றன.இந்த ஆண்டு இறுதியில் இந்த பஸ்கள் இயக்கப்படும்.பஸ்கள் வழக்கமான பயணிகள் பயணத்துக்கும், சுற்றுலாப் பயணத்துக்கும் பயன்படுத்தப்படும்.இந்த பஸ்கள் தனியார் ஒப்பந்ததாரர் மூலம் இயக்கப்படும். வழித்தடத் திட்டமிடல் மற்றும் கட்டண நிர்ணயம் ஆகியவை தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும். இதற்கான டெண்டர் விரைவில் விடப்படும் என்றுமாநகர போக்குவரத்துக்கழக அதிகாரிகள் கூறினர்.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?