சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் சதுரங்கப் போட்டி: இன்று துவங்கியது
Aug 10 2025
15

சென்னை, ஆக. 8–
இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்க கிளாசிக்கல் சதுரங்கப் போட்டியான குவாண்ட்பாக்ஸ் சென்னை கிராண்ட்மாஸ்டர்ஸ் 2025 மூன்றாவது பதிப்பு, சென்னையில் உள்ள ஹயாட் ரீஜென்சி ஓட்டலில் இன்று தொடங்கியது.
இந்தியா மற்றும் உலகம் முழுவதிலுமிருந்து 19 சிறந்த கிராண்ட்மாஸ்டர்கள் மற்றும் ஒரு சர்வதேச மாஸ்டர் பங்கேற்றுள்ள இந்தப் போட்டியின் மொத்த பரிசுத்தொகை ரூ.1 கோடி ஆகும். மேலும் மதிப்புமிக்க எப்ஐடிஇ சர்க்யூட் புள்ளிகளையும் வழங்குகிறது. இந்த புள்ளிகள் 2026 கேண்டிடேட்ஸ் போட்டிக்கான தகுதி பெறுவதை தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
எம்ஜிடி1 ஆல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்தப் போட்டி, மாஸ்டர்ஸ் மற்றும் சேலஞ்சர்ஸ் என இரண்டு பிரிவுகளில் நடைபெறுகிறது. இரு பிரிவிலும் தலா 10 வீரர்கள் கலந்து கொள்ளும் இந்த தொடர் ரவுண்ட்-ராபின் முறையில் நடத்தப்படுகிறது.
போட்டியின் தொடக்க நாளான இன்று மாஸ்டர்ஸ் பிரிவு முதல் சுற்றில் சென்னையைச் சேர்ந்த கிராண்ட்மாஸ்டர்களான வி.பிரணவ், கார்த்திகேயன் முரளி ஆகியோர் மோதினர். இந்த ஆட்டம் 44-வது நகர்த்தலின் போது டிராவில் முடிவடைந்தது. இதனால் இருவருக்கும் தலா 0.5 புள்ளிகள் வழங்கப்பட்டது. இந்திய கிராண்ட் மாஸ்டர்களான ஆர்.வைஷாலி - பா.இனியன் மோதிய ஆட்டம் டிராவில் முடிவடைந்தது. இது தவிர பல்வேறு முன்னணி வீரர்கள் கலந்து கொண்ட போட்டிகளும் நடைபெற்றது.
இரு பிரிவிலும் நாளை 2-வது சுற்று ஆட்டங்கள் நடைபெறுகின்றன.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?