செம்பியம் பகுதியில் குட்கா விற்பனை: 2 வடமாநில ஆசாமிகள் கைது
Aug 10 2025
20

சென்னை, ஆக. 8–
செம்பியம் பகுதியில் குட்கா விற்பனை செய்த 2 வடமாநில ஆசாமிகளை போலீசார் கைது செய்தனர்.
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஆ.அருண் உத்தரவின்பேரில், 12 காவல் மாவட்டங்களில் உள்ள உதவி ஆணையர்கள், ஆய்வாளர்கள் கொண்ட தனிப்படையினர் தொடர்ந்து கண்காணித்து, எதிரிகளை கைது செய்து, போதைப் பொருட்களை பறிமுதல் செய்து தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக, செம்பியம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில் காவல் குழுவினர் பெரம்பூர் நெடுஞ்சாலையில் உள்ள ஒட்டல் அருகே கண்காணித்த போது, அங்கு இருவர் குட்கா புகையிலை பாக்கெட்டுகளை விற்பனைக்காக வைத்திருந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த முகமது இஷார், முகமது ஆசாத் ஆகிய இருவரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து சுமார் 500 கிராம் எடை கொண்ட ஹான்ஸ், கூலிப் உள்ளிட்ட குட்கா புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட எதிரிகள் இருவரும் விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?