சென்னை நேரு பூங்கா விளையாட்டு வளாகத்தில் நவம்பர் 3–ந் தேதி முதல் 5–ந் தேதி வரை மாநில குத்துச்சண்டை வீரர்கள் போட்டித்தேர்வு

சென்னை நேரு பூங்கா விளையாட்டு வளாகத்தில் நவம்பர் 3–ந் தேதி முதல் 5–ந் தேதி வரை மாநில குத்துச்சண்டை வீரர்கள் போட்டித்தேர்வு


சென்னை, அக்.16–


தமிழக மாநில குத்துச்சண்டை சங்கமும், சென்னை அமெச்சூர் குத்துச்சண்டை சங்கமும் இணைந்து மாநில அளவிலான குத்துச்சண்டை வீரர்கள் தேர்வுப் போட்டிகளை நடத்தவுள்ளன. இப்போட்டிகள் சென்னை நேரு பூங்கா விளையாட்டு வளாகத்தில் நவம்பர் 3 முதல் 5–ந் தேதி வரை நடைபெறும்.


இந்தத் தேர்வுகள் மூலம் தேசிய சீனியர் ஆண்கள் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்புக்கான (7–ந் தேதி முதல் 10–ந் தேதி வரை) மாநில அணியையும், அதேபோல் சப்-ஜூனியர், ஜூனியர், இளம் ஆண்கள் மற்றும் பெண்கள் கப் பிரிவு (2025–26) தேசியப் போட்டிகளுக்கான வீரர்களையும் தேர்வு செய்ய உள்ளனர்.


வீரர்களின் பதிவு, மருத்துவ பரிசோதனை மற்றும் எடைக்கட்டுதல் பணிகள் நவம்பர் 3ஆம் தேதி திங்கட்கிழமை காலை 8.30 மணி முதல் 10.00 மணி வரை நடைபெறும். இத்தேர்வுகளை தமிழக மாநில குத்துச்சண்டை சங்கத் தலைவர் கே. ஸ்ரீதரன், பொதுச் செயலாளர் ஜி. ப்ரித்விராஜ் ஆகியோர் நடத்துகின்றனர். ஒருங்கிணைப்பாளர் ஜி.பி. ரதன் (செயலாளர், சென்னை அமெச்சூர் குத்துச்சண்டை சங்கம்) ஆவார். மேலும் தகவல்களுக்கு 98843 79908 என்ற எண்ணில் அல்லது [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளலாம்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%