கிட்னி திருட்டு; சிறப்பு புலனாய்வு குழு உடனடியாக விசாரணையைத் தொடங்க வேண்டும்: சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
Oct 17 2025
18
சென்னை, அக். 16–
கிட்னி திருட்டு சம்பவம் தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு உடனடியாக விசாரணையைத் தொடங்க வேண்டும் என்று சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தினார்.
சட்டசபையில் கிட்னி திருட்டு தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:
விசைத்தறி தொழிலாளர்களின் வறுமையை பயன்படுத்தி கிட்னி திருட்டு நடைபெற்றுள்ளது. ஏழை மக்களின் கிட்னியை திருடிய மருத்துவமனை மீது தி.மு.க. அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அரசின் விசாரணை குழுவில் இடம் பெற்றுள்ளவர்கள் பாதிக்கப்பட்டோரை விசாரித்துள்ளனர்.
கிட்னி முறைகேடு நடந்துள்ளதை விசாரணை குழு உறுதி செய்துள்ளது. ஐகோர்ட் மதுரை கிளை அமைத்த சிறப்பு புலனாய்வு குழுவிற்கு எதிராக தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. சிறப்பு புலனாய்வு குழு உடனடியாக விசாரணையை தொடங்க தமிழக அரசு வழிவகை செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?