சென்னை வந்த ரெயிலில் கிடந்த 4 கிலோ கஞ்சா: சென்ட்ரல் ரெயில்வே பாதுகாப்பு போலீசார் பறிமுதல்
Aug 14 2025
11

சென்னை, ஆக. 12–
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வந்த வடமாநில விரைவு ரெயிலில் கிடந்த 4 கிலோ கஞ்சாவை சென்ட்ரல் ரெயில்வே பாதுகாப்புப் பிரிவினர் கைப்பற்றினர்.
சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் ரெயில்வே பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்த தலைமைக் காவலர் ஜம்புலிங்கம், தலைமை காவலர் பி.யுவராஜ் உள்ளிட்டோர் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தபோது, ஒடிஸா மாநிலம் பூரியிலிருந்து வந்த விரைவு ரெயிலில் 3 -ஆவது பெட்டியில் கேட்பாரற்று பை கிடப்பதாக தகவல் வந்தது.
இதையடுத்து அங்கு சென்று பையைக் கைப்பற்றி சோதனையிட்டபோது, அதில் இருந்த 2 பாலித்தீன் பண்டல்களில் 4 கிலோ கஞ்சா இருப்பது தெரிய வந்தது. அதன் மதிப்பு ரூ. 2 லட்சமாகும். கஞ்சா பொட்டலங்களைக் கைப்பற்றிய ரயில்வே பாதுகாப்புப் பிரிவினர், அதை போதைத் தடுப்புப் பிரிவினரிடம் ஒப்படைத்தனர்.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?