செய்யாறு அருகே அனக்காவூரில் அருள்மிகு ஸ்ரீ ரேணுகாம்பாள் கோயில் கூழ்வார்க்கும் திருவிழா கோலாகலம்:
Aug 02 2025
101

சிம்ம வாகனத்தில் சுவாமி திருவீதி உலா.
செய்யாறு ஆக .3,
செய்யாறு அடுத்த அனக்காவூர் கிராமத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ ரேணுகாம்பாள் கோயில் கூழ்வார்க்கும் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அடுத்த அனக்காவூரில் அருள்மிகு ஸ்ரீ ரேணுகாம்பாள் கோயில் எழுந்தருளி உள்ளது. நேற்று முன்தினம் ஆடி வெள்ளி முன்னிட்டு கூழ்வார்க்கும் திருவிழா நடைபெற்றது.
பொதுமக்கள் ஊர் கூடி பொங்கல் வைத்து, படையல் வைத்து வழிபட்டனர் .பகலில் பூங்கரகம் பம்பை, உடுக்கையுடன் வீதிஉலா நிகழ்வு நடைபெற்றது.
பிற்பகல் கோயில் அருகே பம்பை உடுக்கையுடன் அம்மன் பாடல்களை பக்தி பரவசத்துடன் பாடி, பின்னர் கூழ் வார்க்கும் வைபவம் நடைபெற்றது.
இரவு அருள்மிகு ஸ்ரீ ரேணுகாம்பாள் சிம்ம வாகனத்தில் உற்சவம் மூர்த்தியாக எழுந்தருளி திருவீதி உலா நிகழ்வு நடைபெற்றது. வான வேடிக்கை நடத்தப்பட்டு இரவு நாடகம் நடைபெற்றது.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?