உக்கல் அருள்மிகு ஸ்ரீ திரௌபதி அம்மன் கோயில் தீமிதி திருவிழா:
Aug 02 2025
14

திரளான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
செய்யாறு ஆக .3,
செய்யாறு அடுத்த உக்கல் அருள்மிகு ஸ்ரீ திரௌபதிஅம்மன் கோயிலில் ஆடி வெள்ளி முன்னிட்டு தீமிதி திருவிழா நேற்று முன்தினம் நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த உக்கல் அருள்மிகு ஸ்ரீ திரௌபதி அம்மன் கோயிலில் ஆடி மாதம் மூன்றாம் வெள்ளிக்கிழமை முன்னிட்டு கூழ்வார்க்கும் திருவிழா மற்றும் தீமிதி திருவிழா நடைபெற்றது.
காப்பு கட்டுதல் நிகழ்வும் ,அதனைத் தொடர்ந்து பூங்கிரகம் ஊர்வலமும், கூழ்வார்த்தல் நிகழ்வும் நடைபெற்றது. பம்பை உடுக்கையுடன் சுவாமி நிதி வீதி உலா நிகழ்வும் நடைபெற்றது.
வெள்ளிக்கிழமை மாலையில் அம்மன் கோயில் அருகில் தீயை பரப்ப விட்டிருந்தனர். முதலில் கோவில் நிர்வாகம் சார்பாக அம்மனுக்காக நெருப்பை வேப்பிலையுடன் மஞ்சள் துணியில் எடுத்துக் கொண்டு பக்தி பரவசத்துடன் தீ மிதித்து சென்றனர்.
அதனைத் தொடர்ந்து போத்ராஜா காவல் தெய்வத்தை பக்தர்கள் தீயில் சுமந்து வந்தனர். பின்னர் விரதமிருந்த திரளான பக்தர்கள் வரிசையாக தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
பக்தர்களும், பொதுமக்களும் கூடி இருந்து தீ மிதிக்கும் நிகழ்வினை பக்தியுடன் வழிபட்டனர். இரவு நாடகம் நடைபெற்றது.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?