டிஜிட்டல் அரெஸ்ட்’ முதியவரிடம் ரூ.15.20 லட்சம் மோசடி

டிஜிட்டல் அரெஸ்ட்’ முதியவரிடம் ரூ.15.20 லட்சம் மோசடி



தஞ்சாவூர், அக்.25 - தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் பகுதியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற தனியார் கணக்காளரிடமிருந்து ரூ.15.20 லட்சம் முறைகேடாக ஆன்லைன் வழியாக மோசடி யில் ஈடுபட்ட மர்ம நபர்களை சைபர் கிரைம் காவல் துறையினர் தேடி வருகின்றனர். திருவிடைமருதூர் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி யன் (65). இவர் தனியார் நிறுவனத்தில் கணக்காளராக பணி யாற்றி ஓய்வு பெற்றவர். இவருக்கு கடந்த 22.9.2025 அன்று செல்போனில் ஒரு அழைப்பு வந்துள்ளது. எதிர்முனையில் பேசியவர், தான் ட்ராய் அமைப்பி லிருந்து பேசுவதாகவும், உங்கள் ஆதார் எண்ணை வைத்து வங்கி கணக்குகள் தொடங்கப்பட்டு, பல கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளதாக மும்பை காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். எனவே, மும்பை காவல்துறையினர் உங்களை தொடர்பு கொள் வார்கள் என தெரிவித்துவிட்டு, தொடர்பை துண்டித்து உள்ளார். பின்னர், சிறிது நேரம் கழித்து மும்பை காவல்து றையில் இருந்து பேசுகிறோம் உங்கள் ஆதார் எண்ணை வைத்து நரேஷ் கோயல் என்பவர் 100 வங்கி கணக்கு கள் தொடங்கி, ரூ.600 கோடிக்கு மேல் மோசடி செய்து கைதாகி உள்ளார். இதனால் உங்கள் மீது வாரண்ட் பிறப்பிக் கப்பட்டுள்ளது. எனவே, மன்னிப்பு கடிதம் எழுதி அனுப்புங்கள்; வீட்டில் வேறு யார் உள்ளனர் என கேட்டு உள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த சுப்பிரமணியன், வீட்டில் தானும், தனது மனைவியும் இருப்பதாக கூறி, பின்னர் மன்னிப்பு கடிதமும் எழுதி அனுப்பியுள்ளார். தொடர்ந்து அவரது செல்போன் எண்ணுக்கு மும்பை காவல்துறை எனத் தெரிவித்து, இரண்டு பிடிஎப் பைல்கள் அனுப்பப் பட்டுள்ளன. அதில் சுப்பிரமணியனுக்கு அரஸ்ட் வாரண்டுக் கான ஆர்டர் காப்பி என இருந்துள்ளது. மீண்டும் அவர்கள் சுப்பிரமணியனை தொடர்பு கொண்டு, நாங்கள் கூறும் வங்கி கணக்குக்கு பணம் அனுப்புங்கள், உங்கள் மீது தவறு இல்லை என தெரிய வந்தவுடன், நாங்கள் பணத்தை திருப்பி அனுப்பு வோம் எனக் கூறியுள்ளனர். இதையடுத்து சுப்பிரமணி யன் ஒரே தவணையில் ரூ.15.20 லட்சத்தை அனுப்பி யுள்ளார். மீண்டும் தன்னை தொடர்பு கொண்ட எண்ணில் சுப்பிரமணியன் அவர்களை தொடர்பு கொள்ள முயன்ற போது, அந்த எண் சுவிட்ச் ஆப் என்று வந்துள்ளது. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர், தஞ்சா வூர் இணையதள குற்றப்பிரிவில் புகார் செய்தார். காவ‌ல் துறை‌யின‌ர் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். டிஜிட்டல் அரஸ்ட், ஆன்-லைன் டிரேடிங் என வரும் அழைப்புகளை பொதுமக்கள் யாரும் நம்பி பணம் அனுப்ப வேண்டாம். அது முழுவதும் பொய்யான அழைப்பு. எனவே பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என தஞ்சாவூர் இணையதளக் குற்றப்பிரிவு காவ‌ல்துறை‌யின‌ர் தெரிவித்துள்ளனர்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%