ஆம்னி பஸ் தீ விபத்தில் திருப்பூர் வாலிபர் பலி

ஆம்னி பஸ் தீ விபத்தில் திருப்பூர் வாலிபர் பலி



திருப்பூர், அக்.25- தெலுங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் இருந்து வியாழனன்று மாலை, பெங்களூருவுக்கு தனியார் ஆம்னி பஸ் புறப்பட்டுச் சென்றது. வெள்ளிக்கிழமை அதிகாலை, ஆந் திர மாநிலம், கர்னுால் அருகே, பைக் மீது மோதிய பஸ், தீப்பி டித்து எரிந்தது. இதில் பைக்கில் சென்ற ஒருவர் மற்றும் ஆம்னி பஸ்சில் பயணித்த 19 பேர் உயிரிழந்தனர். பஸ்ஸில் உயிரிழந்த வர்களில் ஒருவர் திருப்பூரைச் சேர்ந்தவர் என்று தெரியவந் துள்ளது. திருப்பூர் பூலுவபட்டி லட்சுமி நகரை சேர்ந்தவர் ராஜா (63), தள்ளுவண்டியில் வெங்காயம் வியாபாரம் செய்து வருகி றார். இவரது மனைவி சாந்தி. இவர்களுக்கு, இரண்டு மகன் கள். இளைய மகன் யுவன்சங்கர்ராஜ் (22). இவர் ஹைதரா பாத்தில் மருத்துவ ஆய்வகத்தில் பணிபுரிந்து வந்தார். தீபா வளி பண்டிகைக்கு விடுமுறை கிடைக்காத நிலையில், பண் டிகை முடிந்தபின் விடுமுறை எடுத்துக் கொண்டு, பெற்றோரை பார்ப்பதற்காக, தனியார் ஆம்னி பஸ்ஸில் திருப்பூருக்கு புறப் பட்டுள்ளார். 

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%