சென்னை: ஆடவருக்கான ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் 2026-ம் ஆண்டு பிப்ரவரி 7 முதல் மார்ச் 8 வரை இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற உள்ளது. 20 அணிகள் கலந்து கொள்ளும் இந்தத் தொடரில் 55 ஆட்டங்கள் நடைபெற உள்ளன.
போட்டிகள் இந்தியாவில் அகமதாபாத், சென்னை, டெல்லி, மும்பை, கொல்கத்தா ஆகிய நகரங்களில் உள்ள மைதானங்களிலும் இலங்கையில் கொழும்பு நகரில் உள்ள இரு மைதானங்களிலும், கண்டியில் உள்ள மைதானத்திலும் நடைபெற உள்ளன. நடப்பு சாம்பியனான இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் அமெரிக்காவுடன் மோத உள்ளது.
இந்நிலையில், இந்த தொடருக்கான முதற்கட்ட டிக்கெட் விற்பனை இணையதளம் வாயிலாக நேற்று மாலை 6.30 மணிக்கு தொடங்கியது.
இந்தியாவி உள்ள சில நகரங்களில் நடைபெறும் லீக் ஆட்டங்களின் டிக்கெட் விலை குறைந்தபட்சம் ரூ.100 ஆக நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. அதேவேளையில் இலங்கையில் நடைபெறும் ஆட்டங்களுக்கான டிக்கெட் விலை இந்திய மதிப்பில் சுமார் ரூ.292 ஆக இருந்தது.
சென்னையில் நியூஸிலாந்து - ஐக்கிய அரபு அமீரகம் பிப்ரவரி 10-ம் தேதி மோதுகின்றன. இந்த ஆட்டத்துக்கான குறைந்தபட்ச டிக்கெட் விலை ரூ.300 ஆகவும், அதிகபட்ச விலை ரூ.1000 எனவும் நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. சென்னையில் 6 லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன.
இவை அனைத்துக்கும் குறைந்தபட்ச விலை ரூ.300 என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் சென்னையில் பிப்ரவரி 26-ல் நடைபெறும் சூப்பர் 8 ஆட்டத்துக்கான டிக்கெட் விலை ரூ.2 ஆயிரம் முதல் தொடங்கும் எனவும் ஐசிசி தெரிவித்துள்ளது.
கொல்கத்தா மற்றும் அகமதாபாத்தில் நடைபெறும் சில லீக் ஆட்டங்களுக்கு மட்டும் டிக்கெட் விலை குறைந்த பட்சம் ரூ.100 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் நடைபெறும் சில ஆட்டங்களுக்கு குறைந்தபட்ச டிக்கெட் விலை ரூ.150 எனவும், முமபையில் நடைபெறும் சில ஆட்டங்களுக்கு குறைந்தபட்ச டிக்கெட் விலை ரூ.250 எனவும் நிர்ணயித்துள்ளனர்.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?