ஸ்குவாஷ் உலகக் கோப்பை கால் இறுதியில் இந்திய அணி!

ஸ்குவாஷ் உலகக் கோப்பை கால் இறுதியில் இந்திய அணி!


 

சென்னை: எஸ்​டிஏடி ஸ்கு​வாஷ் உலகக் கோப்பை தொடர் சென்​னை​யில் நடை​பெற்று வரு​கிறது. இதில் ‘பி’ பிரி​வில் இடம் பெற்றுள்ள இந்​திய அணி தனது கடைசி லீக் ஆட்​டத்​தில் நேற்று பிரேசில் அணி​யுடன் மோதி​யது. இந்த ஆட்​டத்​தில் இந்​திய அணி முழு​மை​யாக 4-0 என்ற கணக்​கில் வெற்றி பெற்​றது.


ஆடவர் பிரி​வில் இந்​தி​யா​வின் வேல​வன் செந்​தில் குமார் 7-5, 7-2, 7-2 என்ற செட் கணக்​கில் பிரேசிலின் பெட்ரோ மொமெட்​டோவை வீழ்த்​தி​னார். மற்​றொரு ஆட்​டத்​தில் அபய் சிங் 7-3, 7-1, 7-1 என்ற செட் கணக்​கில் டியாகோ கோபியை தோற்​கடித்​தார். மகளிர் பிரிவில் இந்​தி​யா​வின் அனஹத் சிங் 7-4, 7-0, 7-2 என்ற செட் கணக்கில் லாரா சூசா பெசெரா டா சில்​வாவை வீழ்த்​தி​னார்.


மற்​றொரு ஆட்​டத்​தில் ஜோஷ்னா சின்​னப்​பா, பிரேசிலின் புருனா மார்ச்​செசி பெட்​ரிலோவை எதிர்த்து விளை​யாட இருந்​தார். ஆனால் காயம் காரண​மாக புருனா மார்ச்​செசி பெட்​ரிலோ விலகினார். இதனால் ஜோஷ்னா 7-0, 7-0, 7-0 என்ற கணக்​கில் வெற்றி பெற்​ற​தாக அறிவிக்​கப்​பட்​டது. இந்​திய அணிக்கு இது 2-வது வெற்​றி​யாக அமைந்​தது. முதல் ஆட்​டத்​தில் இந்​திய அணி சுவிட்​சர்​லாந்தை 4-0 என வென்​றிருந்​தது.


இந்த 2 வெற்​றிகளின் மூலம் இந்​திய அணி 8 புள்​ளி​களு​டன் தனது பிரி​வில் முதலிடம் பிடித்து கால் இறுதி சுற்​றுக்கு முன்​னேறியது. இதே பிரி​வில் சுவிட்​சர்​லாந்து அணி 2-வது இடம் பிடித்து கால் இறுதி சுற்​றுக்கு தகுதி பெற்​றது. ‘ஏ’ பிரி​வில் முதல் இரு இடங்​களை பிடித்த ஹாங் காங், தென் ஆப்​பிரிக்கா அணி​களும், ‘சி’ பிரி​வில் மலேசி​யா, ஆஸ்​திரேலியா அணி​களும், ‘டி’ பிரி​வில் நடப்பு சாம்​பிய​னான எகிப்​து, ஜப்​பான் அணி​களும் கால் இறுதி சுற்​றில் கால் பதித்​தன.


கால் இறுதி ஆட்​டங்​கள் இன்று நடை​பெறுகின்​றன. இதில் இந்​திய அணி, தென் ஆப்​பிரிக்கா​வுடன் பலப்​பரீட்சை நடத்​துகிறது. இந்த ஆட்​டம் மாலை 6 மணிக்கு எக்​ஸ்​பிரஸ் அவென்யூ மாலில் நடை​பெறுகிறது. மற்ற கால் இறுதி ஆட்​டங்​களில் ஹாங் காங் - சுவிட்​சர்​லாந்​து, ஜப்​பான் - மலேசி​யா, எகிப்து - ஆஸ்​திரேலி​யா அணிகள்​ மோதுகின்​றன.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%