தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரியில் ஓராண்டு மருத்துவம் சார்ந்த சான்றிதழ் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்
Oct 25 2025
18
தஞ்சாவூர், அக். 23- தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரியில் 2025-26 ஆம் கல்வி ஆண்டிற்கான மருத்துவம் சார்ந்த சான்றிதழ் பாடப் பிரிவுகளில் மாவட்ட அளவிலான சேர்க்கைக்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதுகுறித்து, தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம் மேலும் தெரிவித்திருப்பதாவது: இப்படிப்பிற்கான கல்வித்தகுதி 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 12 ஆம் வகுப்பில் அறிவியல் பாடப்பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கார்டியோ சோனோகிராபி டெக்னிசியன் (பெண்கள் மட்டும்), இசிஜி, ட்ரெட் மில் டெக்னிசியன், எமெர்ஜென்சி கேர் டெக்னிசியன், ரெஸ்பிரேட்டரி தெரபி டெக்னிசியன், டயாலிசிஸ் டெக்னிசியன், அனஸ்தீசியா டெக்னிசியன், தியேட்டர் டெக்னிசியன், ஆர்த்தோபெடிக் டெக்னிசியன் (ஆண்கள் மட்டும்), மல்டி பர்பஸ் ஹெல்த் ஒர்க்கர் மற்றும் இஇஜி, இஎம்ஜி கோர்ஸ் டெக்னிசியன் போன்ற ஒரு வருட சான்றிதழ் படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடைபெற்று கொண்டிருக்கிறது. இதற்கான ஆரம்ப வயது 17 ஆண்டுகள். உச்சபட்ச வயது வரம்பு இல்லை. மேற்கண்ட படிப்புகளுக்கான கட்டணம் ரூ.1,550 ஆகும். அரசு பள்ளிகளில் தமிழ் வழியில் படித்த மாணவர்களுக்கு தமிழ் புதல்வன், புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் ரூ.1000 மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ் ரூ.1,000 வீதமும் 12 மாதங்களுக்கு மொத்தம் ரூ.24,000 உதவித்தொகை வழங்கப்படுகிறது. எனவே, பயிற்சி பெற விரும்பும் மாணவர்கள் தஞ்சாவூர் திறன் பயிற்சி அலுவலர் (9698364676), தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி துணை முதல்வர் (9443680890) ஆகியோரை, 31.10.2025-க்குள் தொடர்பு கொண்டு பயிற்சியில் சேர்ந்துக் கொள்ளுமாறு தெரிவித்துள்ளார்.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?