வடகிழக்கு பருவமழையினை முன்னிட்டு ஒத்திகை பயிற்சி மற்றும் செயல் விளக்கம்
Oct 25 2025
22
பெரம்பலூர், அக். 23- பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் சார்பில், வடகிழக்கு பருவமழையினை முன்னிட்டு, மாதிரி ஒத்திகை பயிற்சி மற்றும் செயல் விளக்கம் நிகழ்ச்சியை வியாழக்கிழமை பெரம்பலூர் மாவட்டத்திற்கான கண்காணிப்பு அலுவலர் / மாற்றுத்திறனாளிகள் நலத்துறை ஆணையர் எம். லக்ஷ்மி, மாவட்ட ஆட்சியர் ந. மிருணாளினி முன்னிலையில் தொடங்கி வைத்துப் பார்வையிட்டனர். பொதுமக்கள், பேரிடர் காலங்களில் வீடுகளில் உள்ள பொருட்களைக் கொண்டு எவ்வாறு மீட்பு உபகரணங்களை தயார் செய்வது மற்றும் தற்காத்துக் கொள்வது குறித்து விழிப்புணர்வு செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும் பொதுமக்கள் தங்களை இடி,மின்னல்களில் இருந்து எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது, வாகனங்களில் செல்லும்போது மின் கம்பிகள் அறுந்து விழுந்திருந்தால் அதிலிருந்து எவ்வாறு தப்பிப்பது என்பது குறித்து செயல்விளக்கம் காண்பிக்கப்பட்டது. மேலும், கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்களை எவ்வாறு மீட்க வேண்டும். கட்டிடத்தில் ஏற்படும் தீயை எவ்வாறு அணைக்க வேண்டும். இடிபாடுகள் மற்றும் நீரில் சிக்கிய நபர்கள், கால்நடைகளை கயிறு மூலம் மீட்டல், ஏணி மூலம் மீட்டல், மூச்சுக்கருவி அணிந்து உயிர்களை காப்பாற்றுதல் உள்ளிட்ட நிகழ்வுகளும், தீ விபத்தில் இருந்து காப்பாற்றுதல், பேரிடர் காலங்களில் வாகனங்களில் சிக்கிக் கொண்டவர்களை எவ்வாறு காப்பாற்ற வேண்டும் என்பது குறித்த ஒத்திகை நிகழ்ச்சியை தீயணைப்பு வீரர்கள் நிகழ்த்திக் காட்டினர். இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் மு. வடிவேல்பிரபு, மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை அலுவலர் அனுசுயா உள்ளிட்டோர் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?