திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று கல்வி கடன் சிறப்பு முகாம்

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று கல்வி கடன் சிறப்பு முகாம்



திருச்சிராப்பள்ளி, அக். 23- திருச்சி மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட முன்னோடி வங்கி இணைந்து கல்வி கடன் முகாம் வெள்ளிக்கிழமை காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக தரை தள கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. திருச்சி மாவட்டத்தில் இயங்கி வரும் அனைத்து வங்கிகளும் இந்த முகாமில் பங்கேற்க உள்ளன. திருச்சி மாவட்டத்தில் உள்ள மருத்துவ கல்லூரிகள், பிசியோதெரபி கல்லூரிகள், பி.பார்ம் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், வேளாண் கல்லூரிகள், சட்டக் கல்லூரிகள், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகள் மற்றும் ஐ.டி.ஐ. நிறுவனங்களில் பயின்று வரும் மாணவ- மாணவிகள் அனைவரும், மாணவர் மற்றும் பெற்றோர் ஆதார் அட்டை, மாணவர் மற்றும் பெற்றோர் பான்கார்டு, மாணவர் சாதிச்சான்று, பெற்றோர் ஆண்டு வருமான சான்று, மாணவர் மற்றும் பெற்றோர் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம், 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு மதிப் பெண் சான்றிதழ், மாற்றுச் சான்றிதழ், கல்விச் சான்று, கலந்தாய்வு ஆணை, கல்லூரி சேர்க்கை கடிதம், கல்லூரி கட்டண விவரம், கல்வி பயிலும் சான்று, முதல் பட்டதாரி சான்று. கடன் பெறும் வங்கியின் பெயர் மற்றும் வங்கி கணக்கு புத்தகம் ஆகிய ஆவணங்களுடன், கல்விக் கடன் முகாமில் கலந்து கொண்டு இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு திருச்சி மாவட்ட ஆட்சியர் சரவணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%