குடந்தை - நீடாமங்கலம் இடையே புதிய ரயில் பாதை அமைக்க கோரிக்கை
Oct 25 2025
29
கும்பகோணம், அக். 23- கும்பகோணத்திலிருந்து 25 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது நீடாமங்கலம். நீடாமங்கலத்தில் ரயில்வே சந்திப்பு அமைந்துள்ளது. எனவே கும்பகோணத்தி லிருந்து நீடாமங்கலத்திற்கு புதிய ரயில் பாதை அமைக்க சமூக ஆர் வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கும்பகோணத்திலிருந்து நீடா மங்கலம் செல்லும் வழியில் இடையே வலங்கைமான், ஆலங்குடி, திப்பி ராஜபுரம், திருவோணமங்கலம் ஆகிய பகுதிகள் அமைந்துள்ளன. இங்கு வலங்கைமானில் புகழ் பெற்ற பாடைகட்டி மாரியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் பங்குனிமாதம் பாடை கட்டி திருவிழாவும், ஒவ்வொரு ஞாயிறன்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்து செல்கின்றனர். கும்பகோணத்தில் இருந்து நீடாமங்கலம் வரை ரயில் பாதை அமைத்தால் வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வரும் பக்தர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும் வரும் 2028 ஆம் ஆண்டு கும்பகோணத்தில் மகாமக திரு விழா நடைபெற உள்ளது. இதில், உலக நாடுகளில் இருந்தும் லட்சக் கணக்கான பக்தர்கள் கும்பகோணத்திற்கு வருகை தருவார்கள். லட்சக்கணக்கான பக்தர்கள் கூடும் கும்பகோணம் மகாமக திருவிழாவை முன்னிட்டு, கும்பகோணத்தில் இருந்து நீடாமங்கலம் வரை புதிய ரயில் பாதை அமைத்தால் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் ரயில் பயணிகள் இந்த வழித்தடத்தை பயன்படுத்தி கும்பகோணம் வந்து செல்ல மிகவும் பயனுள்ளதாக அமையும் என ரயில் உபயோகிப்பாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?