தஞ்சைத் தமிழ் மன்றத்தின் திசம்பர் திங்களுக்கான திங்கள் கவியரங்கம்
Dec 14 2025
16
தஞ்சைத் தமிழ் மன்றத்தின் திசம்பர் திங்களுக்கான திங்கள் கவியரங்கம் கும்பகோணம் சரசுவதி பாடசாலா மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. குடந்தை இலக்கியப் பேரவை நிறுவனர் கு செல்லதுரை கவியரங்கத் தலைமை ஏற்று கவியரங்கத்தை நடத்தினார். தஞ்சைத் தமிழ் மன்ற நிறுவனர் செயலர் தமிழ் செம்மல் இராம வேல்முருகன் மற்றும் சரசுவதி பாடசாலா மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியை திருமதி லதா அம்பலவாணன் ஆகியோர் முன்னிலை வைத்தனர். தஞ்சாவூர் கும்பகோணம் மன்னார்குடி திருத்துறைப்பூண்டி திருவிடைமருதூர் திருநாகேஸ்வரம் வலங்கைமான் பட்டீஸ்வரம் ஆகிய இடங்களில் இருந்து வருகை தந்த கவிஞர்கள் இடுக்கண் களைவதே நட்பு என்ற தலைப்பில் கவிதைகளை வழங்கினர். கவியரங்கத்துக்கு வருகை தந்தவர்களை கவியரங்கப் பேரவை இயக்குனர் கவிஞர் இளையதீபன் வரவேற்றார். இணை இயக்குநர் மதிவாணன் நன்றியுரை ஆற்றினார்.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?