தமிழக அரசு பள்ளிகளில் 4லட்சம் மாணவர்கள் சேர்க்கை •அமைச்சர் அன்பில்மகேஷ் பெருமிதம்
Jul 31 2025
20
சென்னை, ஆக. 1-
தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித் துறையின் அறிவுறுத்தலின் அடிப்படையில் 2025- 26 ம் கல்வியாண்டில் ஜூலை 30 ம் தேதி வரையில், 4 லட்சத்து 364 மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவரது எக்ஸ் தள பதிவு வருமாறு-
அரசுப் பள்ளி மாணவர் சேர்க்கை 4 லட்சம். ஆயிரம் முத்தங்களுடன் மாணவச் செல்வங்களை வரவேற்கிறோம். அரசுப் பள்ளி என்பது வறுமையின் அடையாளம் அல்ல! அது பெருமையின் அடையாளம். அரசுப் பள்ளிகளில், கே.ஜி 32, 807, 1 ம் வகுப்பு (தமிழ் வழிக் கல்வி) 2,11,563, ஆங்கில வழிக்கல்வி 63,896. 2 ம் வகுப்பு முதல் 8 ம் வகுப்பு வரை 92,098 பேர் சேர்க்கை. மொத்தம் 400,364 மாணவர்கள் சேர்ந்துள்ளனர். இதில், அதிகபட்சமாக தென்காசி மாவட்டத்தில் 8,571 மாணவர்களும், திண்டுக்கல் மாவட்டத்தில் 8,000 மாணவர்களும், திருச்சியில் 7,711 மாணவர்களும், கள்ளக்குறிச்சியில் 7,554 மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். மிகக் குறைந்தபட்சமாக, நீலகிரி மாவட்டத்தில் 1,022 மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அவர் கூறிஉள்ளார்.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?