வேதாரண்யம்: எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாகக் கூறிய தமிழக மீனவர்கள் 7 பேர் இலங்கை கடற்படையினரால் புதன்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், அவர்களின் படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டம் , பெருமாள்பேட்டை தேவராஜ் உள்ளிட்ட 4 மீனவர்களும், சீர்காழி வானகிரி ராஜேஷ் உள்ளிட்ட 3 மீனவர்களும் தனித்தனியே இரண்டு கண்ணாடியிழைப் படகுகளில் நாகை மாவட்டம், வேதாரண்யம் அடுத்த கோடியக்கரையில் இருந்து செவ்வாய்க்கிழமை மதியம் மீன்பிடிக்க கடலுக்குள் சென்றுள்ளனர்.
இவர்கள் 7 பேரும் எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் புதன்கிழமை அதிகாலையில் கைது செய்துள்ளனர்.
மேலும், அவர்களது 2 படகுகளையும் பறிமுதல் செய்துள்ளது. கைதான மீனவர்கள் 7 பேரையும் காங்கேசன்துறை முகாமில் வைத்து இலங்கை படையினர் விசாரணை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழக மீனவர்கள் தொடர்ந்து இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு வருவது தமிழக மீனவர்களிடையே பெரும் அச்சத்தையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களை மீட்குமாறு அவர்களின் குடும்பத்தினரும் மீனவ அமைப்புகளும் அரசிடம் கோரிக்கை வைத்துள்ளன.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?