தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் மதுரை மாவட்ட செயற்குழு கூட்டம்
Oct 25 2025
20
*தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் மதுரை மாவட்ட செயற்குழு கூட்டம் 25.10.25 அன்று காலை 10.50 மணிக்கு மாவட்ட தலைவர் முனைவர் சு கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது*
*கூட்டத்தில் கீழ்க்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டன*
1) *நவம்பர் 11,ல் மாநில மாநாட்டு அறைகூவல் தீர்மானத்தின்படி மதுரை கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு, அண்ணா நகர், புதூர் ஆகிய கிளைகளை இணைத்து மாவட்ட கருவூல அலுவலகத்திலும் திருப்பரங்குன்றம், மேலூர் ,வாடிப்பட்டி, திருமங்கலம், உசிலம்பட்டி, பேரையூர் கிளைகளில் வட்டத்தலைநகரங்களில் பொறுப்பு மாவட்ட நிர்வாகிகள் தலைமையில் பெருந்திரளான பங்கேற்புடன் ஆர்ப்பாட்டம் நடத்துவதென்றும் முடிவு செய்யப்பட்டது* *மாவட்டம் சார்பில் ஆயிரம் நோட்டீஸ் போடப்பட்டது விநியோகம் செய்வது வட்டக் கிளைகளிலும் தோழமை சங்கத்தின் வாழ்த்துரையுடன் நோட்டீஸ் தயாரிப்பு செய்து பயன்படுத்திக் கொள்வது என்று முடிவு செய்யப்பட்டது*
2) *உறுப்பினர் சந்தா, இதழ் சந்தா சேர்ப்பதில் கூடுதல் கவனம் செலுத்துதல்*
3) *இதழ் சந்தா பணியை மேற்கு வட்டக் கிளை தலைவர் கே.நாகேஸ்வரன் கவனித்து வருவது*
4) *மாநில செயற்குழு உறுப்பினர்களாக தோழர் அ. பால் முருகன் மாவட்ட செயலாளர்,நி.வெள்ளைக்கக்கன் தலைவர் கிழக்கு வட்டக் கிளை, ஆர்.நாராயணன் வடக்கு வட்டக் கிளை ஆகியோர் செயலாற்றுவது*
5) *சென்னை தர்ணா பங்கேற்பு குறித்து மாநில நிர்வாகிகள் கூட்டத்திற்கு பின்னர் முடிவு செய்வது*
6) *புதிய மாநில தலைவர் என் ஜெயச்சந்திரன் மாநில செயலாளர் முனைவர் சு கிருஷ்ணன் மாநில மகளிர் துணைக் குழு உறுப்பினர் இ.பானு ஆகியோருக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது*
*மாநில தலைவர் என்.ஜெயச்சந்திரன் நிறைவுரையுடன் கூட்டம் முடிந்தது*. *கூட்டத்தில் மாவட்டத்திலுள்ள 12 கிளைகளில் மதுரை தெற்கு வட்டக் கிளை நீங்கலாக அனைத்து கிளைகளும் கலந்து கொண்டனர்.
மாவட்ட பொருளாளர் கே.நாராயணன் நன்றியுரை.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?